முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் ஆப்பிரிக்க பெண் உலக அழகியாக தேர்வு

திங்கட்கிழமை, 15 டிசம்பர் 2014      உலகம்
Image Unavailable

லண்டன் - தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 22 வயதான ரோலென் ஸ்ட்ராஸ், 2014-ஆம் ஆண்டின் உலக அழகியாகத் தேர்தெடுக்கப்பட்டார். லண்டனில் நடைபெற்ற விழாவில் அவர் கவுரவிக்கப்பட்டார். ஹங்கேரியின் எடினா மற்றும் அமெரிக்காவின் எல்சபெத் ஆகியோர் முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்தனர்.
முன்னதாக, ஹாண்டுரான் நாட்டைச் சேர்ந்த அழகி திடீரென சுட்டுக் கொல்லப்பட்டத்தால் இந்தப் போட்டி நடைபெறுவதில் சந்தேகங்கள் நிலவின. இந்த போட்டியில் பங்கேற்ற 124 அழகிகளும், ஆக்ஸ்ஃபோர்ட் யூனியன் சொசைட்டிக்கு சில வாரங்களுக்கு முன் சென்றனர். அங்கு, நவீன சமுதாயத்திற்கு இத்தகைய அழகிப் போட்டிகள் தேவை தானா என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. ஆனால் பிரிட்டைன் ஊடகங்கள் சில, இந்த நிகழ்ச்சியில் எந்த விவாதமும் சரியாக எழுப்பப்படவில்லை என மாணவர்கள் ஏமாற்றம் தெரிவித்ததாகக் கூறியிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து