முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தோனேசியா நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு

திங்கட்கிழமை, 15 டிசம்பர் 2014      உலகம்
Image Unavailable

ஜாவா - இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.
மத்திய ஜாவா மாகாணம், பங்சர்நெக்ரா மாவட்டம், ஜெம்பிளங் என்ற கிராமத்தில், கன மழையை தொடர்ந்து இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார், ராணுவ வீரர்கள், தன்னார்வலர்கள் என சுமார் 1,250 பேர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அங்கு சனிக்கிழமை வரை 20 பேரின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று முன்தினம் மேலும் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
இதுவரை 15 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அப்பகுதியைச் சேர்ந்த 577 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். மீட்புப் பணியில் மோப்ப நாய்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. நிலச்சரிவில் சாலைகளும் சேதமடைந்ததால் அங்கு ஜேசிபி உள்ளிட்ட கனரக இயந்திரங்களை கொண்டுசெல்ல முடியவில்லை. இந்நிலையில் மீட்புப் பணி சவாலாக இருப்பதாக மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். “இங்கு மண் உதிரியாகவும் சேறும் சகதியுமாக உள்ளது. தோண்டும்போது மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் கவனமுடன் பணியாற்ற வேண்டியுள்ளது” என்று அவர்கள் கூறினர். இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ பங்சர்நெக்ரா சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து