முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவர்களுக்கு உதவிதொகை: வாசன் வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 15 டிசம்பர் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை - அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மத்திய அரசிடமிருந்து கிடைக்கப் பெறும் கல்வி உதவித் தொகையை தமிழக அரசு உடனடியாக பெற்று வழங்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்..
இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
மத்திய அரசின் தேசிய வருவாய் மற்றும் கல்வி உதவித் திட்டத்தின் கீழ் பல்வேறு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
அரசு,மாநகராட்சி, நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அவர்களின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சத்திற்கு உட்பட்ட மாணவ, மாணவியருக்கு தகுதித் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சுமார் 57,000 மாணவர்கள் தகுதித் தேர்வில் கலந்து கொண்டனர். அதில் சுமார் 7,000 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு இதுவரை மத்திய அரசிடமிருந்து கிடைக்கக்கூடிய கல்வி உதவித் தொகை வழங்கப்படவில்லை.
கிட்டத்தட்ட 9 மாதங்கள் ஆகியும் திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு அதுவும் வருமான அடிப்படையில் பின் தங்கியவர்களுக்கு இதுவரை கல்வி உதவித் தொகை அளிக்காமலிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.
தமிழக அரசு மத்திய அரசிடமிருந்து கிடைக்கப் பெறும் கல்வி உதவித் தொகைக்கான நிதியை உடனடியாக தகுதி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து