முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணைய தளம் முடக்கம்

திங்கட்கிழமை, 15 டிசம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை - மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணைய தளம் திடீரென்று முடக்கப்பட்டுள்ளது. இதில் தீவிரவாதிகள் ஈடுபட்டுள்ளார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள்.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் வரலாறு மற்றும் வழிபாடு குறித்த பல்வேறு தகவல்கள் அடங்கிய இணைய தளம் உள்ளது. கோவிலின் பெருமைகளை விளக்கும் அரிய புகைப்படங்களும் அதில் இடம் பெற்று இருந்தன. உலகம் முழுவதும்உள்ள லட்சக்கணக்கான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் இந்த இணைய தளத்தை பயன்படுத்தி வந்தனர்.இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக இந்த இணைய தளம் முடக்கப்பட்டு உள்ளதாக மீனாட்சி அம்மன் கோவிலுக்கு புகார்கள் வந்தன. இது தொடர்பாக கோவில் நிர்வாக அதிகாரி நடராஜன் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்மாத்தூரிடம் புகார் செய்தார்.
இணைய தளம் முடக்கப்பட்டது குறித்து சைபர்கிரைம் போலீசார் விசாரிக்க போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூர் உத்தரவிட்டார். சைபர் கிரைம் போலீசார் இது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தஞ்சாவூரில் உள்ள புகழ் பெற்ற சரஸ்வதி மகால் நூலக இணைய தளமும் இதே போன்று முடக்கப்பட்டு உள்ளது. அந்த இணையதளத்தில் நுழைந்தால் பாகிஸ்தான் தேசிய கொடியும், காஷ்மீர் விடுதலையை வலியுறுத்தும் ஆங்கில வாசகங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த இணைய தளத்தில் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பு என்ற பெயரில் மர்ம நபர்கள் ஊடுருவி முடக்கி இருக்கலாம் என்று தெரிகிறது. அதே போன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் இணைய தளமும் முடக்கப்பட்டுள்ளது. எனவே இதில் தீவிரவாதிகள் சதி இருக்கிறதா? என்பது குறித்தும் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணைய தளம் முடக்கப்பட்டுள்ளதால் அதை சரி செய்யும் பணி நடைபெற்று வருவதாக இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து