முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. அமைச்சர் சொத்து மதிப்பு 2 ஆண்டில் 500 மடங்கு உயர்வு

திங்கட்கிழமை, 15 டிசம்பர் 2014      அரசியல்
Image Unavailable

லக்னோ - உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி அரசில் உள்ள அமைச்சர் ஒருவரின் சொத்து மதிப்பு கடந்த 2 ஆண்டுகளில் 500 மடங்கு உயர்ந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து லோக்அயுக்தா விசாரணை நடத்தி வருகிறது.
உத்தரபிரதேச மாநிலத்தில் அகிலேஷ்யாதவ் தலைமையில் சமாஜ்வாடி அரசு ஆட்சி நடத்தி வருகிறது. இவரது அமைச்சரவையில் சுரங்க துறை அமைச்சராக இருப்பவர் காயத்ரி பிரஜாபதி. இவர் கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது அமேதி சட்டமன்ற தொகுதியில் மூத்த காங்கிரஸ் தலைவர் அமித்ரா சிங்கை தோற்கடித்தார். இதற்காக இவருக்கு அமைச்சரவையில் வளம் கொழிக்கும் முக்கிய இலாகா ஒதுக்கப்பட்டது.
வேட்பு மனு தாக்கலின் போது இவர் தனது சொத்து மதிப்பு சுமார் ரூ. 2 கோடி என தெரிவித்திருந்தார். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளில் இவரது சொத்து மதிப்பு சுமார் 500 மடங்கு அதிகரித்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது இவருக்கு ரூ. 942 கோடி சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து மாநில லோக் அயுக்தாவில் ஓம் சங்கர் திவேதி என்பவர் சுமார் 1700 பக்கங்கள் அடங்கிய புகார் மனுவை கொடுத்துள்ளார். அமைச்சர் பெயரிலும், அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் பெயரில் கடந்த 2 ஆண்டுகளில் லக்னோ மற்றும் அமேதியில் வாங்கி குவித்துள்ள சொத்துக்களின் பட்டியலையும் அவர் தனது புகார் மனுவில் இணைத்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்டதாக லோக் அயுக்தா நீதிபதி என்.கே.மெஹ்ரோத்ரா கூறியுள்ளார். இது குறித்து விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்துள்ளார். இதற்கிடையில் இந்தக் குற்றச்சாட்டுகளை பிரஜாபதி மறுத்துள்ளார். புகாரில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து