முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் - டீசல் விலை தலா ரூ.2 குறைப்பு

செவ்வாய்க்கிழமை, 16 டிசம்பர் 2014      வர்த்தகம்
Image Unavailable

புது டெல்லி - கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வருவதை அடுத்து பெட்ரோல், டீசல் விலை தலா ரூ. 2 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலைகள் அடிக்கடி உயர்த்தப்பட்டு வந்தன. இதற்கு கச்சா எண்ணெய் விலை உயர்வே காரணமாக அப்போது கூறப்பட்டது. இந்த விலை உயர்வால் அனைத்து பொருட்களின் விலைகளும் தாறுமாறாக உயர்ந்தன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால் பெட்ரோல், டீசல் விலை பலமுறை குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையின் சரிவை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை தலா ரூ. 2 குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த விலை குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இந்த விலை குறைப்பினை தொடர்ந்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 63.94க்கும், டீசல் ரூ. 53.78க்கும் விற்பனை செய்யப்படும். பெட்ரோல் விலை 8வது முறையாகவும், டீசல் விலை 4வது முறையாகவும் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து