முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் வழக்குகள் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றம்

செவ்வாய்க்கிழமை, 16 டிசம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை, டிச. 17 தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத் தலைவர் நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அக்ஷயகுமார் நியமித்தைதை எதிர்த்து வழக்குரைஞர் ரசூல் என்பவரும், இந்த ஆணையத்துக்கு ஓய்வு பெற்ற நீதிபதியை தலைவராக நியமிக்க உத்தரவிடக் கோரியும் சென்னை வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் தமிழ்மணியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இதே போன்று மின்கட்டண உயர்வை எதிர்த்து மூத்த வழக்குரைஞர் ஆர்.காந்தியும் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்குகள் அனைத்தும் தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை (டிச.16) விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது அரசு தரப்பில் அரசு வழக்குரைஞர் ஆஜராகி, மின்சார ஒழுங்கு முறை ஆணையம் தொடர்பான இரண்டு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது. மேலும், உயர் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடையும் விதித்துள்ளது எனத் தெரிவித்தார்.
மூத்த வழக்குரைஞர் ஆர்.காந்தி ஆஜராகி, மின்கட்டணம் தொடர்பாக வாதாடினார். இதற்கு, இந்த வழக்கையும், உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு வழக்குரைஞர் தெரிவித்தார்.
இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது, விசாரணை
நடத்தினால் அது முறையாக இருக்காது என வழக்கை ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து