முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.எஸ். உடன் இணைந்த சீன தீவரவாதிகள்

செவ்வாய்க்கிழமை, 16 டிசம்பர் 2014      உலகம்
Image Unavailable

பெய்ஜீங் - ஈராக், சிரியாவில் இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்புடன் 300 சீன தீவிரவாதிகள் இணைந்து போரில் ஈடுபட்டுள்ளனர்.
கிழக்கு துருக்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கத்தின் சீன தீவிரவாதிகள் சிங்ஜியானில் தாக்குதல் நடத்தியதாக அந்த செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதே தீவிரவாதிகள் தற்போது துருக்கி வழியாக சிரியா சென்று அங்கு இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்புடன் இணைந்துள்ளனர்.
ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவு தெரிவித்து, இணையும் வகையில் எல்லை தாண்டி பலர் சிரியா, ஈராக் நாடுகளுக்குள் ஊடுருவது பெரிதும் அதிகரித்து வருவதாக தங்களுக்கு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன என்று சீன அயலுறவு அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது. ஏற்கெனவே மத்திய கிழக்கு நாட்டிற்கான சீன தூதர் வூ சிகே என்பவர் கூறும்போது கிழக்கு துருக்கிஸ்தான் இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த சீன குடிமகன்கள் 100 பேருக்கு ஐ.எஸ். பயிற்சி அளித்துவருவதாக தெரிவித்திருந்தார்.
சீனாவின் சிங்ஜியானில் சுமார் 11 மில்லியன் உய்குர் முஸ்லிம்கள் உள்ளனர். இவர்களுக்காக கிழக்கு துருக்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம் தேர்வு செய்து அல் கய்தாவினால் பயிற்சி அளிக்கப்பட்ட தீவிரவாதிகள் போராடி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து