முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூரு ஐபிஎல் அணியில் இருந்து யுவராஜ் சிங் அதிரடி நீக்கம்

செவ்வாய்க்கிழமை, 16 டிசம்பர் 2014      விளையாட்டு
Image Unavailable

மும்பை - பெங்களூர் ஐபிஎல் அணியில் இருந்து யுவராஜ் சிங் அதிரடியாக நீக்கப்பட்டார். மேலும் டெல்லி அணியில் இருந்து கேப்டன் உள்பட 13 பேரை வெளியேற்றினர்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் அடுத்த ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் நடக்க உள்ளது. போட்டிக்கான அட்டவணை வெளியிடப்படாத நிலையில், தங்களது அணியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் அனைத்து அணிகளுமே இறங்கியுள்ளன. தங்களது அணியில் உள்ள அதிக விலைக்கு வாங்கப்பட்டு, சரியாக விளையாடாத வீரர்களை நீக்குவதன் மூலம் அடுத்த தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் அதிக பணத்தை தங்களது கையிருப்பில் வைத்துக் கொள்ளும் நடவடிக்கையில் ஐபிஎல் அணிகள் இறங்கி உள்ளன.
டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு 2014ம் ஆண்டு ஐபிஎல் சீசன் மிகவும் மோசமானதாக அமைந்திருந்தது. இதனால், அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனில் தங்களது அணியில் இருந்து 13 வீரர்களைக் கழற்றிவிட்டுள்ளது டெல்லி அணி. கேப்டன் கெவின் பீட்டர்சன், தினேஷ் கார்த்திக், முரளி விஜய், ஜெயதேவ், உனட்கட், ராஸ் டெய்லர், லஷ்மி ரத்தன் சுக்லா, ராகுல் சர்மா, வெய்ன் பார்னெல், நீஷம், சித்தார்த் கவுல், ராகுல் சுக்லா, சரத், மலிந்த் குமார் ஆகியோர் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் புதிய வீரர்களை ஏலம் எடுக்க டெல்லி அணிக்கு ரூ. 40 கோடி கிடைத்துள்ளது.
இதே போன்று மும்பை அணி 8 வீரர்களை நீக்கியுள்ளது. பிரக்யான் ஓஜா, ஜாகீர் கான், ஜலஜ் சக்சேனா, பென் டங்க், அபூர்வா வாங்கடே, கவுதம், கிரிஷ்மர் சன்டோகியா, சுஷாந்த் மராதே ஆகியோர் மும்பை அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் புதிய வீரர்களை வாங்க மும்பை அணிக்கு ரூ.10 கோடி கிடைத்துள்ளது.கடந்த ஆண்டு அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டவரான யுவராஜ் சிங்கை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி விடுவித்துள்ளது. அவர் ஏலத்தில் ரூ.14 கோடிக்கு வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முத்தையா முரளிதரன், அல்பி மோர்கல், ரவி ராம்பால், சச்சின் ராணா, ஷதாப் ஜகாதி, தன்மாய் மிஸ்ரா ஆகியோரும் பெங்க ளூரு அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பெங்களூரு அணி ஏலத்தில் ரூ.21 கோடிக்கு புதிய வீரர்களை வாங்க முடியும். மேலும் யுவராஜ் சிங்கை குறைந்த தொகைக்கு மீண்டும் வாங்கவும் பெங்களூரு அணி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து