முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

செவ்வாய்க்கிழமை, 16 டிசம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

மதுரை - மதுரை தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 1.1.2011 முதல் 31.12.2013 வரை பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 7ம் தேதி வரை பதிவை புதுப்பித்துக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மததுரை தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் ஜ. மகாராணி விடுத்துள்ள செய்தி குறிப்பில்,
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 1.1.2011 முதல் 31.12.2013 வரை வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்கள் தங்களது பதிவுகளை புதுப்பித்துக் கொள்ள சிறப்பு சலுகை வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மேலே குறிப்பிட்ட நாட்களுக்குள் வேலைவாய்ப்பு பதிவினை புதுப்பிக்க தவறிய நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, புதுக்கோட்டை, நாமக்கல், மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 16 மாவட்டங்களை சேர்ந்த மதுரை தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு கிளை அலுவலக பதிவுதாரர்கள் தங்களது பதிவினை புதுப்பித்துக் கொள்ளலாம். இணையதளம் மூலமாகவோ, இவ்வலுவலகத்தை நேரில் அணுகியோ அல்லது தபால் மூலமாகவோ பதிவை புதுப்பித்து கொள்ளலாம். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 7ம் தேதிக்குப் பின் பெறப்படும் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று அவர் அந்த செய்தி குறி்ப்பில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து