முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் சிபிஐ அலட்சியம்: சிறப்பு நீதிமன்றம்

செவ்வாய்க்கிழமை, 16 டிசம்பர் 2014      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் நடைபெற்ற விசாரணையின் போது வழக்கு தொடர்பாக விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்காத சிபிஐ புலனாய்வு அதிகாரிக்கு சிறப்பு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் சிபிஐ அலட்சியம் காட்டுவதாக நீதிமன்றம் கண்டித்தது.
முன்னாள் சுரங்கத் துறை செயலாளர் எச்.சி. குப்தா, இணை செயலாளர் கே. எஸ். குரோபா, நிலக்கரி ஒதுக்கீடு முதலாம் பிரிவு இயக்குனர் கே.சி. சமாரியா, மத்திய பிரதேசத்தை சேர்ந்த கமல் ஸ்பான்ஜ் ஸ்டீல் அண்ட் பவர் லிமிடெட் நிறுவனத்தை சேர்ந்த இரண்டு அதிகாரிகள் ஆகியோர் மீது நிலக்கரி சுரங்க முறைகேட்டில் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆனால் கடந்த முறை நடந்த விசாரணையின் போது அவர்கள் மீதான வழக்கு விசாரணையை முடித்து கொள்வதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை அப்போது நிராகரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பியது. அதோடு இந்த விசாரணையையும் ஒத்தி வைத்தது.
இதையடுத்து இந்த வழக்கு நீதிபதி பாரத் பராஸர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான சிபிஐ புலனாய்வு அதிகாரி சம்மன் அனுப்பப்பட்டுள்ளவர்கள் தொடர்பான புகார்களை திரட்டி வருகிறோம் என்று தெரிவித்தார். விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்காத அதிகாரியின் இச்செயலை கண்டித்து நீதிபதி கூறியதாவது,
ஏன் விசாரணை அறிக்கையை நீங்கள் கொண்டு வரவில்லை. வழக்கின் விசாரணை தொடர்பாக நான் தினமும் உத்தரவு பிறப்பிக்க விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும். இது தொடர்பாக நாங்கள் உத்தரவிட்டு 45 நாட்களுக்கு மேல் ஆகிறது. ஆனால் நீங்கள் விசாரணை செய்து வருவதாக கூறுகிறீர்கள். நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் சிபிஐ அலட்சியம் காட்டுகிறது. இந்த வழக்கு விசாரணை வரும் 22ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. அன்று வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர்களுக்கு இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் புலனாய்வு அதிகாரி வழங்கிட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து