முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெகன்மோகன் நிறுவன சொத்துக்கள் ரூ. 47 கோடி பறிமுதல்

செவ்வாய்க்கிழமை, 16 டிசம்பர் 2014      இந்தியா
Image Unavailable

ஐதராபாத் - சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் ரூ. 47 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.
ஆந்திர முதல்வராக ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி இருந்த போது பென்னா குழும நிறுவனங்களுக்கு முறையற்ற வகையில் சலுகைகள் காட்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கு பிரதிபலனாக அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டிக்கு சொந்தமான ஜகதி பப்ளிகேசன்ஸ், கார்மல் ஏஷியா ஹோல்டிங்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் பி.ஆர்.எனர்ஜி ஹோல்டிங்ஸ் நிறுவனத்திடம் இருந்து பணம் பெற்றதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் சிபிஐ கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 10ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் பி.ஆர். எனர்ஜி ஹோல்டிங்ஸ் நிறுவனத்திடம் இருந்து ஜகதி பப்ளிகேஷன்ஸ் ரூ. 45 கோடியையும், கார்மல் ஏஷியா ஹோல்டிங்ஸ் ரூ. 23 கோடியையும் பெற்றதாக தெரிவித்திருந்தது.
இந்த விவகாரம் குறித்து விசாரித்த அமலாக்கத் துறை மேற்கண்ட இரு நிறுவனங்களும் பெற்ற மொத்த தொகையான ரூ. 68 கோடியில் ரூ. 47 கோடியானது ஜெகனுக்கு சொந்தமான ஜகதி பப்ளிகேஷன்ஸ், இந்திரா தொலைக்காட்சி, ஜனனி இன்ப்ராஸ்டிரக்சர் ஆகிய நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டதை கண்டறிந்தது. அதை தொடர்ந்து இந்த நிறுவனங்களிடம் இருந்து ரூ. 47 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து