முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி

புதன்கிழமை, 17 டிசம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை - வேலூர் மாவட்டத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 11 வயது சிறுமி குடும்பத்திற்கு ரூ 3 லட்சம் உதவித்தொகை வழங்க முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:
வேலூர் மாவட்டம், கல்யாண பெரியாங்குப்பத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி, மாச்சனூர் கிராம அரசினர் உயர்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்த நிலையில்,கடந்த 15.12.2014 அன்று பள்ளியிலிருந்து வீட்டிற்குத் திரும்பாததால், அவரது உறவினர்கள்அவரை தேடிப் பார்த்தபோது 16.12.2014 அன்று கல்யாண பெரியாங்குப்பத்தில் முட்புதர் ஒன்றில் கை, கால்கள் ரிப்பனால் கட்டப்பட்ட நிலையில் அம்மாணவி இறந்து கிடந்ததை கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து, மேற்படி மாணவியின் தாயார் கே.வி. குப்பம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அரசு மருத்துவமனையில்நடைபெற்ற பிரேத பரிசோதனையில், அவர் பாலியல் பலாத்கார முயற்சிக்குஉட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது
.புலன் விசாரணையில், அதே பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வரும் பெரியாங்குப்பத்தைச் சேர்ந்த மாணவன் (வயது 15) அம்மாணவியைப் பாலியல் பலாத்காரமுயற்சிக்கு உட்படுத்தி, கொலை செய்தது தெரிய வந்தது. தலைமறைவாக இருந்தஅம்மாணவனை, காவல் துறை தனிப்படையினர் பிடித்து விசாரித்ததில், அம்மாணவன், இறந்து போன மாணவியைப் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்து, கொலை செய்து விட்டு, அவர் அணிந்திருந்த கால் கொலுசை திருடிச் சென்றது தெரிய வந்துள்ளது.
பாலியல் பலாத்கார முயற்சியில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட அம்மாணவியின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாடு அரசு வகுத்துள்ள பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டுத் திட்டத்தின்படி, கொலை செய்யப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு மூன்று லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த வழக்கில் புலன் விசாரணையை விரைந்து முடித்து சட்டப்படி நடவடிக்கை எடுத்திட காவல்துறை தலைமை இயக்குநருக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து