முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை நிறுத்தப்படாது: பாகிஸ்தான்

புதன்கிழமை, 17 டிசம்பர் 2014      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் - ராணுவப் பள்ளியில் பயங்கரவாதிகள் கொடூரத் தாக்குதல் நடத்தியதற்கு அஞ்சி, வடக்கு வாசரிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் நிறுத்தப்படாது என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் காஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் ராணுவம் நடத்தி வரும் பள்ளியில் புகுந்த தலிபான் தீவிரவாதிகள், மாணவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில், 132 குழந்தைகள் உட்பட 141 பேர் பலியானார்கள். ராணுவ வீரர்கள் நடத்திய பதிலடி தாக்குதலில் 6 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், தொலைக்காட்சி நிறுவனத்துக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் காஜா ஆசிப் கூறியதாவது:
ராணுவப் பள்ளியில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு நடத்தியதற்கு அஞ்சி வடக்கு வாசரிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் நிறுத்தப்படாது. தலிபான் தீவிரவாதிகள் பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கின்றனர். தலிபான்களில் நல்லவர்கள், கெட்டவர்கள் என்ற பேதமெல்லாம் கிடையாது. அவர்கள் அனைவருமே கொடியவர்கள்தான்.
தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் ராணுவ வீரர்களின் குழந்தைகள் இறந்துள்ளனர். இருப்பினும்,பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் நடத்தியதற்கு அஞ்சி வடக்கு வாசரிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் நிறுத்தப்படாது, என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து