முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: மோடி

புதன்கிழமை, 17 டிசம்பர் 2014      அரசியல்
Image Unavailable

ஜம்மு - ஜம்மு-காஷ்மீரில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று பிரதமர் மோடி பிரச்சாரம் செய்த போது பேசினார்.
ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவை இறுதிக்கட்டத் தேர் தலை முன்னிட்டு அந்த மாநிலத் தில் பிலாவர் தொகுதி, சான் கெய்ட் மாண்லி பகுதியில் பாஜக சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
காஷ்மீர் மாநிலத்தில் தந்தை- மகன், தந்தை-மகள், ஆட்சிகள் மாறி மாறி வந்து கொண்டிருக்கின்றன. மாநில மக்களுக்கு ஆட்சி நிர்வாகத்தில் இதுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை. வாரிசு அரசியல் என்பது ஜன நாயகத்தை அரித்து தின்னும் கரை யான்கள். அவை ஜனநாயகத்தின் அஸ்திபாரத்தையே அரித்து விடும். ஜம்மு-காஷ்மீரில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. பாஜகவில் ஜனநாயகம் தழைத்தோங்கி வருகிறது. ஒரு டீக்கடைக்காரர் இப்போது நாட்டின் பிரதமர். இதுதான் ஜனநாயகம்.
காங்கிரஸ் கட்சி மக்களை ஏமாற்றி வருகிறது. காஷ்மீரில் ஏதாவது ஒரு கட்சிக்கு ஆதரவு அளித்து அதன் மூலம் அந்தக் கட்சி ஆதாயம் அடைந்து வருகிறது. இதனால் காஷ்மீர் மக்களுக்கு எவ்வித நன்மையும் இல்லை.
மாநிலத்தில் வலுவான அரசு அமைய வேண்டும். அப்போது தான் வளர்ச்சிப் பணிகள் உத் வேகம் பெறும். பாஜக ஆட்சிக்கு வந்தால் சுற்றுலா மேம்படுத்தப் படும். வேலைவாய்ப்புகள் பெருக் கப்படும். எனவே இந்தமுறை பாஜகவுக்கு வாக்களியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து