முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்., தாக்குதல் எதிரொலி: பள்ளிகளில் பாதுகாப்பை அதிகரிக்க அறிவுரை

புதன்கிழமை, 17 டிசம்பர் 2014      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - இந்தியாவில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பாதுகாப்பை மேம்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் நேற்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் ராணுவ பள்ளி ஒன்றில் நுழைந்த தீவிரவாதிகள் அங்கிருந்த குழந்தைகளை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்ற சம்பவம் உலகையே அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கிறது. இந்த சம்பவத்திற்கு உலக தலைவர்கள் அனைவரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பயங்கரவாதம் ஒடுக்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதனிடையே இந்த சம்பவத்தில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 132 ல் இருந்து நேற்று 145 ஆக உயர்ந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தீவிரவாதம் ஒடுக்கப்படும். தலிபான்கள் விரட்டப்படுவார்கள். அதுவரை ஓயப்போவதில்லை என்று தெரிவித்தார். மேலும் ஆப்கானிஸ்தான் அரசோடு இணைந்து தலிபான்களை ஒழிக்கப் போவதாகவும் அவர் சூளுரைத்தார். இந்த நிலையில் பாகிஸ்தான் சம்பவத்தை அடுத்து இந்தியாவின் பல நகரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளிகள், கல்லூரிகளில் பாதுகாப்பை அதிகரிக்க மத்திய அரசு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பாராளுமன்ற வளாகத்தில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் செய்தியாளர்கள் நேற்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பினர்.
அப்போது, பாகிஸ்தானில் பள்ளிக்கூடத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தியாவில் என்ன மாதிரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, "இந்தியாவில், கல்வி நிலையங்களின் பாதுகாப்பை மேம்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை கல்வி நிலையங்களுக்கு அனுப்பப்படும்" என்றார்.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறும்போது, "பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டால் அதிலிருந்து தப்பிக்க ஏதுவாக பள்ளிகளில் ரகசிய வழிகள் ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதாக கூறினர்.
மேலும், பிணைக்கைதிகளாக சிக்குவதில் இருந்து எப்படி தற்காத்துக் கொள்வது, அவசர நிலைகளில் கதவுகளை தாழிட்டு தற்காத்துக் கொள்வது தொடர்பாக விதிமுறைகள் இடம்பெற்றுள்ளது, என்றார்.
முன்னதாக, கடந்த 2010-ம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபின்னர் பள்ளிகளுக்கு இதுபோன்ற சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது. அதன்பிறகு, இப்போது அதே பரிந்துரை மேம்படுத்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பப்படும் எனத் தெரிகிறது.
டெல்லி, மும்பை, உத்தராகண்ட், இமாச்சல பிரதேசத்தில் உள்ள சில பள்ளிகளுக்கு சிறப்பு சுற்றறிக்கைகள் அனுப்பப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானில் நேற்று முன் தினம் ராணுவ பள்ளி ஒன்றில் புகுந்த தீவிரவாதிகள் அங்கிருந்த குழந்தைகள் உள்ளிட்ட 141 பேரை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொண்றனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் தான் பள்ளிகளில் பாதுகாப்பை அதிகரிக்க மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து