முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு இந்தியா தடை

புதன்கிழமை, 17 டிசம்பர் 2014      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு இந்தியா தடை விதித்தது. இந்தியாவில் இருந்து இதுவரை 4 பேர் மட்டுமே ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்துள்ளதாகவும், இவர்களில் ஒருவர் நாடு திரும்பியதும், கைது செய்யப்பட்டு காவலில் இருப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
இந்தியாவில் ஐ.எஸ். செயல்பாடுகள் இல்லை என்பதாலும் இராக்கில் ஐ.எஸ். வசமிருப்பதாக கருதப்படும் இந்தியத் தொழிலாளர்கள் 39 பேரை மீட்கவேண்டும் என்பதாலும் இந்தியா இதுவரை ஐ.எஸ். மீது தடை விதிக்காமல் இருந்தது. இவ்வாறு தடை விதிக்கும்போது, இந்தியாவில் அவர்களின் அனுதாபிகள் ரகசியமாக செயல்படத் தொடங்கினால் அவர்களை பிடிப்பது கடினம் என்றும் அதிகாரிகள் கூறினர்.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறும்போது, பிற நாடுகளில் ஐ.எஸ். செயல்பாடுகளை நாங்கள் கவனத்தில் எடுத்துக்கொண்டோம். இந்தியாவில் ஐ.எஸ். செயல்பாடுகளை முடக்க விரும்புகிறோம். இதில் முதல்கட்டமாக அந்த அமைப்புக்கு தடை விதித்துள்ளோம், என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து