முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மரண தண்டனைக்கு காத்திருக்கும் 382 கைதிகள்

புதன்கிழமை, 17 டிசம்பர் 2014      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - நாடு முழுவதும் பல்வேறு சிறைகளில் 382 மரண தண்டனை கைதிகள் தண்டனைக்கு காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பான கேள்விக்கு உள்துறை இணை அமைச்சர் ஹரிபாய் பரதிபாய் சவுத்ரி லோக்சபையில் எழுத்து மூலம் அளித்த பதில் வருமாறு:
மரண தண்டனை கைதிகளுக்கு கருணையின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் மன்னிப்பு வழங்க அரசியல் சட்டத்தின் 72-வது பிரிவு வகை செய்கிறது. இப்பிரிவின் கீழ் கடந்த 34 ஆண்டுகளில்123 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பரிசீலிக்கப்பட்டன.
இவற்றில் சண்டீகரைச் சேர்ந்த பல்வந்த்சிங் ரஜோனா, அசாமைச் சேர்ந்த மன் பகதூர் திவான், கேரளத்தைச் சேர்ந்த அந்தோனி ஆகிய 3 பேரின் மனுக்கள் தவிர மற்ற அனைத்தும் முடித்து வைக்கப்பட்டன. இந்த மனுக்களை பரிசீலித்து முடிவு எடுக்க காலக்கெடு ஏதுமில்லை. என்றாலும் இவை இயன்றவரை விரைந்து முடித்து வைக்கப்படுகின்றன. இவ்வாறு அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து