முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் தாக்குதலுக்கு மோடி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்

புதன்கிழமை, 17 டிசம்பர் 2014      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - பாகிஸ்தான் பள்ளியில் தலிபான்கள் நடத்திய தாக்குதலுக்கு ஜனாதிபதி முகர்ஜி, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள பள்ளியில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 130 குழந்தைகள் உள்பட 160 பேர் பலியானார்கள்.
இந்த தாக்குதலுக்கு இந்திய ஜனாதிபதிபிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி ட்விட்டர் இணைய தளத்தில் கூறியுள்ளதாவது:
குழந்தைகளின் உயிரைப் பறித்த தீவிரவாதிகளின் இச்செயல், மிகவும் கோழைத்தனமானது. இத்தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள் கிறேன்.
மத்திய உள்துறை அமைச் சர் ராஜ்நாத் சிங் கூறும்போது:
மிகமோசமான, மனிதத்தன்மை யற்ற இந்த தாக்குதல் சம்பவம், தீவிரவாதத்தின் கோரமுகத்தை நமக்கு வெளிக்காட்டுவதாக உள்ளது” என்றார். பள்ளிக் குழந்தைகள் மீது தலிபான் நடத்திய தாக்குதலுக்கு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியா வின் கைலாஷ் சத்யார்த்தி, பாகிஸ் தானின் மலாலா யூசுப்சாய் ஆகியோர் கண்டனம் தெரிவித் துள்ளனர்.
மலாலா கூறும்போது, “இந்த சம்பவத்தை அறிந்து நான் மிகவும் மன வேதனையடைந்தேன். இந்த படுபயங்கரமான, கோழைத் தனமான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். தீவிரவாதத்துக்கு எதிராகப் போராடும் பாகிஸ்தான் அரசு மற்றும் பாதுகாப்புப் படையினரின் செயல்பாடு பாராட்டத்தக்கது. உயிரிழந்த எனது சகோதர, சகோதரி களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.
சத்யார்த்தி கூறும்போது, “தலிபான்கள் தாக்கு தல் நடத்திய இந்த தினம், மனிதகுலத்தின் இருண்ட நாளாகும். வன்முறைத் தாக்குதலில் இருந்து குழந்தை களை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் பாகிஸ்தான் அரசு மேற்கொள்ள வேண்டும், என்று கேட்டுக் கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து