முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாரம்பரிய இடங்களை தெரிவு செய்து அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தல்

புதன்கிழமை, 17 டிசம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை - நான்காவது பல்லுயிர் பரவல் வாரியக்கூட்டம் நேற்று தலைமைச் செயலகத்தில் வனத்துறை அமைச்சர் .எம்.எஸ்.எம்.ஆனந்தன் தமிழ்நாடு பல்லுயிர் பரவல் வாரியத்தின் நான்காவது வாரியக்கூட்டம் நடைபெற்றது,
இக்கூட்டத்தில் பல்லுயிர் பரவல் பாரம்பரிய இடங்கள் கண்டறிதல், கிராம பல்லுயிர் நிர்வாகக்குழுக்கள் அமைத்தல், மக்கள் பல்லுயிர் பதிவேடுகளைத் தயாரித்தல், தமிழ்நாடு பல்லுயிர் பரவல் விதிமுறைகள் தயாரித்தல், மற்றும் பல்லுயிர் பரவல் வாரியத்தின் கட்டமைப்பினைப் பலப்படுத்துதல் தொடர்பான பொருட்களில் முடிவெடுக்க நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கப்பட்டன. பல்லுயிர் பரவல் பாரம்பரிய இடங்களை தெரிவு செய்து அறிவிக்கை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மற்றும் வாரியத்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.
இக்கூட்டத்தில் தேசிய பல்லுயிர் பரவல் ஆணையத்தின் பிரதிநிதி குறிப்பிட்டபடி தமிழ்நாடு பல்லுயிர் பரவல் விதிகள் தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டு விரைவில் தமிழ்நாடு பல்லுயிர் பரவல் வாரியத்திற்கு அனுப்பப்பட உள்ளது. மேலும், தமிழகத்தில் தானாக வளரக்கூடிய உள்ளூர் பூக்கும் தாவரங்களின் புகைப்படத்தோடு கூடிய பட்டியலை கொண்டதொரு கையேடு தயார் செய்யப் பொருத்தமான ஒரு திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முடிவு எடுக்கப்பட்டது,
கூட்டத்தில் உறுப்பினர் செயலர் நன்றியுரை வழங்க கூட்டம் நிறைவுபெற்றது. இதில் அரசு முதன்மைச்செயலர் ஹன்ஸ் ராஜ் வர்மா மற்றும் அரசு செயலர், கால்நடை பராமரிப்பு , மீன்வளம் மற்றும் பால் வளத்துறை எஸ்.விஜயகுமார், தமிழ்நாடு பல்லுயிர் பரவல் வாரியத்தின் உறுப்பினர் செயலர் .ராகேஷ் குமார் டோக்ரா, மற்றும் வாரியத்தின் பிற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து