முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய பாஜக அரசுக்கு ஜி.கே. வாசன் கண்டனம்

புதன்கிழமை, 17 டிசம்பர் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை - கிறிஸ்துமஸ் நாளின் முக்கியத்துவத்தை குறைப்பது இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மதன்மோகன் மாளவியா ஆகியோரது பிறந்த நாளான 25ம் தேதியை நல்லாட்சி தினமாக கொண்டாடப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அன்றைய தினம் மத்திய அரசு பள்ளிகளில் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது. 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை நாளாகும். உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் மகிழ்ந்து கொண்டாடும் நாள். பிற மதத்தினரோடு அன்போடு அரவணைத்து மகிழும் புனித நாள்.
உலகெங்கும் விடுமுறை நாளான கிறிஸ்துமஸ் நாளை நல்லாட்சி தினம் என கூறி கட்டுரைப் போட்டிகள் நடத்துவது கிறிஸ்தவர்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியர்களின் நலனுக்கும் எதிரானது. மத நல்லிணக்கம், மத சார்பின்மைக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவது கண்டனத்துக்குரியது. இந்த விஷயத்தில் மத்திய அரசு தனது தவறுகளை சரி செய்து கிறிஸ்தவர்களின் உரிமைகளை காக்க வேண்டும் என்று ஜி.கே. வாசன் அந்த அறிக்கையில் வலியுறுத்தி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து