முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக். ராணுவத்துக்கு சீன படைகள் ஆயுத பயிற்சி: அறிக்கை தாக்கல்

புதன்கிழமை, 17 டிசம்பர் 2014      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - பாகிஸ்தான் ராணுவத்திற்கு சீனப்படைகள் ஆயுத பயிற்சி அளித்து வருகிறதா என்பது குறித்த முதல் கட்ட அறிக்கையை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளனர்.
இதனை மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜ்ஜூ மக்களவையில் தெரிவித்தார். இருப்பினும் பாகிஸ்தானுக்கு சீனப்படைகள் பயிற்சி அளிப்பதாக கிடைத்த தகவல் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை என்றார். இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு கிரண் ரிஜ்ஜூ எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில்,
பாகிஸ்தான் ராணுவத்திற்கு தேவையான உதவிகளையும், தளவாடங்களையும் நீண்ட காலமாக சீனா வழங்கி வருகிறது. ராணுவம், கப்பல் படை, விமானப்படை சார்ந்த நடவடிக்கைகளை தொடர்ந்து இரு நாடுகளும் இணைந்தே மேற்கொண்டு வருகின்றன. பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்துள்ள ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகளில் அந்நாட்டினர் என்ன செய்து வருகிறார்கள் என்பது குறித்தும் இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு குறித்தும் சீனாவிடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு மேம்பாட்டுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக கிரண்ரிஜ்ஜூ தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து