முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானை வெற்றி கண்ட தினம் வங்கதேசத்தில் கொண்டாட்டம்

புதன்கிழமை, 17 டிசம்பர் 2014      உலகம்
Image Unavailable

டாக்கா - பாகிஸ்தானுடனான விடுதலை போரில் வெற்றி பெற்றதன் 43வது ஆண்டு விழாவை வங்கதேசம் கொண்டாடியது.
இது தொடர்பாக தலைநகர் டாக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிபர் அப்துல்ஹமீது, பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் கலந்து கொண்டு போரில் உயிர்த்தியாகம் செய்தோருக்கு அஞ்சலி செலுத்தினர். எதிர்க்கட்சி தலைவர் கலிதா ஜியா உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். பிறகு நடைபெற்ற தேசிய தின அணிவகுப்பில் முப்படைகளின் முன்னாள் வீரர்கள் கலந்து கொண்டனர். கிழக்கு பாகிஸ்தானாக இருந்த வங்கதேசத்தில் பொதுமக்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் அடக்குமுறையை கையாண்டதை எதிர்த்து 1971ல் ஆயுத கிளர்ச்சி தொடங்கியது. அதனை தொடர்ந்து வங்கதேச கிளர்ச்சி படையினர் இந்திய ராணுவத்தின் உதவியுடன் பாகிஸ்தான் ராணுவத்தை தோற்கடித்தது. அதையடுத்து 93 ஆயிரம் வீரர்களுடன் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஏ.ஏ.கே. நியாஸி அதே ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி இந்திய வங்கதேச கூட்டுப்படையிடம் சரணடைந்தார். அந்த நாளை வெற்றி தினமாக வங்கதேசம் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து