முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அன்புமணி ராமதாஸ் சிபிஐ கோர்ட்டில் ஆஜர்

புதன்கிழமை, 17 டிசம்பர் 2014      அரசியல்
Image Unavailable

புது டெல்லி - மருத்துவக் கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி வழங்கிய வழக்கில் அன்புமணி ராமதாஸ் நேற்று சிபிஐ கோர்ட்டில் ஆஜராகி பதிலளித்தார்.
பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ். கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது உள்கட்டமைப்பு வசதிகள் நிறைவு பெறாத நிலையில் இந்தூரை சேர்ந்த மருத்துவக் கல்லூரிக்கு 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதே போல் உத்தரபிரதேசத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறி அன்புமணி ராமதாஸ் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் அன்புமணி ராமதாஸ் உட்பட 10 பேர் மீது டெல்லி சிபிஐ சிறப்பு கோர்ட்டில் நீதிபதி மதுஜெயின் முன் ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு விதிமுறைகள் மீறி அனுமதி வழங்கப்பட்டதாகவும், இதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் அன்புமணி ராமதாஸ் உட்பட 5 பேருக்கு டெல்லி கோர்ட் கடந்த ஆகஸ்ட் மாதம் ஜாமீன் வழங்கியது. கடந்த டிசம்பர் மாதம் 2ம் தேதி சிபிஐ கோர்ட்டில் வழக்கு விசாரணை தொடங்கியது. நேற்று இந்த வழக்கு தொடர்பாக அன்புமணி ராமதாஸ் சிபிஐ கோர்ட்டில் ஆஜரானார். அப்போது தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து அவர் பதில் அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து