முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அருண்ஜெட்லிக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம்: திரிணாமுல் நோட்டீஸ்

புதன்கிழமை, 17 டிசம்பர் 2014      அரசியல்
Image Unavailable

புது டெல்லி - மத்திய அரசு பள்ளிகளில் கிறிஸ்துமஸ் விடுமுறை ரத்து விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் பொய் தகவல் அளித்ததாக மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லிக்கு எதிராக திரிணாமுல் காங்கிரசார் உரிமை மீறல் தீர்மானம் தாக்கல் செய்தனர்.
மத்திய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளில் கிறிஸ்துமஸ் விடுமுறையை ரத்து செய்து விட்டு அன்றைய தினம் வாஜ்பாய், மதன்மோகன் மாளவியா போன்ற பாஜ மூத்த தலைவர்கள் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் நல்ல ஆளுமை தினம் என்ற தலைப்பில் கட்டுரை போட்டி நடத்த வேண்டும் என்று மத்திய அரசின் கல்வித்துறை அண்மையில் சுற்றறிக்கை அனுப்பியது. இது பத்திரிகைகளில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர் எச்சூரி பிரச்சினை எழுப்பினார். மத உரிமைகள் பறிக்கப்படுவதாக குற்றம் சாட்டினார். அப்போது மாநிலங்களவையில் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி இல்லை. அவருக்கு பதிலாக நிதியமைச்சரும், மாநிலங்களவை பாஜக தலைவருமான அருண்ஜெட்லி பதில் அளித்தார். மத்திய அரசு பள்ளிகளில் கிறிஸ்துமஸ் விடுமுறையை ரத்து செய்து சுற்றறிக்கை ஏதும் அனுப்பப்படவில்லை என்றும் அன்றைய தினம் ஆன்லைனில் கட்டுரை போட்டி நடத்த மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் மத்திய அரசின் பள்ளிகளுக்கு மத்திய கல்வி வாரியம் அனுப்பிய சுற்றறிக்கை நகல் ஒன்றை மாநிலங்களவையில் எச்சூரி படித்து காட்டினார். அதில் கிறி்ஸ்துமஸ் தினத்தன்று மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. சுற்றறிக்கை நகலை மாநிலங்களவை துணை தலைவர் குரியனிடம் எச்சூரி வழங்கினார். இதை தொடர்ந்து அவையில் தவறான தகவலை அளித்த அருண்ஜெட்லி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரசார் கோஷம் எழுப்பினர். ஜெட்லிக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர அனுமதிக்க வேண்டும் என அவை தலைவரிடம் திரிணாமுல் எம்.பி. டெரக் ஓ பிரைன் நோட்டீஸ் கொடுத்தார். இந்த தீர்மானத்துக்கு அவை தலைவர் அன்சாரி அனுமதி கொடுக்கும்பட்சத்தில் அது மாநிலங்களவை உரிமை மீறல் கமிட்டியின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படும். இதே போல் மக்களவையில் தவறான தகவல் அளித்த வெங்கையா நாயுடுவுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து