முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாரதா நிதி மோசடி வழக்கு: நீதிபதியிடம் அழுத அமைச்சர்

புதன்கிழமை, 17 டிசம்பர் 2014      அரசியல்
Image Unavailable

கொல்கத்தா - சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட மேற்கு வங்க மாநில அமைச்சர் மதன் மித்ரா, சிபிஐ காவலுக்கு அனுப்பாதீர் என நீதிபதியிடம் கண்ணீர் விட்டு கதறி அழுதார். ஆனால் அவரது கோரிக்கையை நிராகரித்து நாளை வரை சிபிஐ விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.
மேற்குவங்கம் மற்றும் அதனையொட்டிய அசாம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் செயல்பட்டு வந்த சாரதா சிட்பண்ட் நிறுவனம் கடந்த ஆண்டு திவாலானது. லட்சக்கணக்கான சாதாரண மக்களின் கோடிக்கணக்கான சேமிப்பு ஸ்வாகா செய்யப்பட்டது. சிட்பண்ட் தலைவர், இயக்குனர் மற்றும் ஏஜண்டுகளை மாநில போலீசார் கைது செய்தனர். ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு மோசடியில் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கோஷ் கைது செய்யப்பட்டார். மம்தா அரசில் அமைச்சராக இருக்கும் மதன் மித்ராவை கடந்த வாரம் சிபிஐ கைது செய்தது. அவரிடம் 4 நாள் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் மித்ரா ஆஜர்படுத்தப்பட்டார். அவரை மேலும் சில நாட்கள் விசாரிக்க சிபிஐ அனுமதி கோரியது. அப்போது சிபிஐ காவலுக்கு அனுப்பாதீர் என அமைச்சர் கண்ணீர் விட்டு கதறினார். நீதிபதியிடம் மித்ரா கூறுகையில், நான் மனநலம் பாதிக்கப்பட்டவன். இதற்காக மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். என்னை சிபிஐ காவலுக்கு அனுப்பினால் செத்து விடுவேன். சிபிஐ அதிகாரிகள் கருப்பு துணியால் முகத்தை மூடிக்கொண்டு மணிக்கணக்காக என் முன்னே உட்கார்ந்து கொள்கிறார்கள். என்னிடம் எந்த கேள்வியும் கேட்பதில்லை. மென்ட்டல் டார்ச்சர் செய்கிறார்கள். மம்தா பணம் வாங்கியதாக ஒப்புக் கொள்ள சொல்லி மிரட்டுகிறார்கள். அப்படி கூறாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டுகிறார்கள். இவ்வாறு மித்ரா கூறினார். சுமார் 90 நிமிடங்கள் விசாரணை நடைபெற்றது. இருப்பினும் மித்ராவின் கோரிக்கையை நீதிபதி ஹர்தன் பந்தோபாத்யாயா நிராகரித்து விட்டார். வரும் 19ம் தேதி(நாளை) வரை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து