முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜன., 6,7,8-ல் நீதிமன்ற பணியிடங்களுக்கு நேர்முக தேர்வு

புதன்கிழமை, 17 டிசம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நேர்முக உதவியாளர்கள் உள்பட 268 பணியிடங்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் ஜனவரிமாதம் 6 ந்தேதி முதல் நேர்முக தேர்வு நடைபெறும் என்று அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இது குறித்து அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:
சென்னை உயர்நீதிமன்றப் பணிகளில் அடங்கிய 268 பணியிடங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 23 ந்தேதி எழுத்துத்தேர்வு நடைபெற்றது. இதில் 27 ஆயிரத்து983 விண்ணப்பதாரர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.நீதிபதிகளுக்கான நேர்முக உதவியாளர்களுக்கு 57, நேர்முக உதவியாளர் 7, உதவியாளர் 37 கம்ப்யூட்டர் ஆபரேட்டர்- 28, மற்றும் தட்டச்சர் -139 என காலியிடங்களின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது
விண்ணப்பதாரர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் இடஒதுக்கீட்டு விதியின் அடிப்படையில் திறனறித் தேர்வுக்கு 1:20 என்ற விகிதத்தின் அடிப்படையில் 3ஆயிரத்து 631 பேர் அனுமதிக்கபட்டனர். திறனறித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், நேர்முகத் தேர்விற்கு அனுமதிக்கப்பட்ட 221 பேர் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு ஜனவரி 5 ந்தேதியும் 6, 7, மற்றும் 8 ஆகிய தேதிகளில் நேர்முகத்தேர்வுகள் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.
தட்டச்சர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் பட்டியல் தேர்வாணைய வலைதளத்தில் பின்னர் வெளியிடப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து