முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின் கட்டண உயர்வால் 1 கோடியே 60 ½ லட்சம் வீடுகளுக்கு பாதிப்பு இல்லை

புதன்கிழமை, 17 டிசம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை - மின்கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டாலும், 2 மாதங்களுக்கு 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு பாதிப்பு வராது. அந்த கட்டண உயர்வை அரசே ஏற்கும். இதற்கான மானியம் மின்வாரியத்துக்கு வழங்கப்படும் என்று முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மொத்தம் 1 கோடியே 71 லட்சம் வீடுகளுக்கு மின் இணைப்புகள் உள்ளன. இதில் 11.83 லட்சம் குடிசைகளுக்கு மின் கட்டணம் இல்லை. கைத்தறி நெசவாளர்களுக்கு 180 யூனிட் வரை மின் கட்டணம் கிடையாது. 2 மாதங்களுக்கு 500 யூனிட்டுக்குள் பயன்படுத்தும் விசைத்தறி நெசவாளர்களுக்கும் மின்கட்டணம் இல்லை.
2 மாதங்களுக்கு 500 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு யூனிட்டுக்கு 85 காசு அதிகரிக்கப்பட்டு யூனிட் ஒன்று ரூ.6.60 ஆகி இருக்கிறது. மொத்தம் உள்ள 1 கோடியே 71 லட்சம் மின் இணைப்புகளில் 10.34 லட்சம் வீடுகளில் மட்டும் தான் 2 மாதங்களுக்கு 500 யூனிட்டுக்கு அதிகமாக மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என்று தெரியவந்துள்ளது.
மீதம் உள்ள 60.66 லட்சம் வீடுகளில் 500 யூனிட்டுக்கு குறைவாகவே மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. எனவே இந்த வீடுகளுக்கு மின்கட்டண உயர்வால் பாதிப்பு ஏற்படாது. அவர்கள் ஏற்கனவே செலுத்திய அதே அளவில்தான் மின் கட்டணம் செலுத்த வேண்டும்.
கடந்த 12–ந்தேதி முதல் மின் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே 2 மாதங்களில் 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துகிறவர்களுக்கு ‘ரீடிங்’ எடுத்த நாளில் இருந்து 12–ந்தேதி வரை பழைய கட்டண விகிதம் கணக்கிடப்படும். அதன் பிறகு பயன்படுத்தப்பட்ட மின்சாரத்துக்கு புதிய கட்டண விகிதப்படி மின் கட்டணம் பதிவு செய்யப்படும்.
இதன்படி 2 மாதங்களில் 500 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துகிறவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியது வரும். 500 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துகிறவர்கள் அதிக கட்டணம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து