முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாளை இறுதிக்கட்ட தேர்தல்: காஷ்மீர் - ஜார்கண்டில் பிரச்சாரம் ஓய்ந்தது

வியாழக்கிழமை, 18 டிசம்பர் 2014      அரசியல்
Image Unavailable

ஸ்ரீநகர் - காஷ்மீர், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் நாளை இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.
காஷ்மீர் சட்டசபைக்கு கடந்த 25ம் தேதி முதல் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 4 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் இறுதிக்கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது. 5ம் கட்டமாக பானி, பசோலி, கத்துவா, பிலாவர், ஹீரன்நகர், காந்திநகர், ஜம்மு கிழக்கு மற்றும் மேற்கு, பிஸ்னாக், ஆர்.எஸ்.புரா, சுகேத்கார்க், மார்ஹ், ராய்ப்பூர், டுமானா, அக்னூர், சாம்ப், நவ்ஷரா, தர்ஹல், ரஜவரி, கலகோட் ஆகிய 20 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது.
முதல் இரண்டு கட்ட தேர்தலில் 70 சதவீதத்துக்கு மேல் வாக்கு சதவீதம் பதிவானது. மூன்றாம் கட்ட தேர்தலில் 50 சதவீதமும், 4ம் கட்ட தேர்தலில் 49 சதவீத வாக்குகள் பதிவாகின. ராணுவ முகாம்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் எதிரொலியாக வாக்கு சதவீதம் குறைந்தது. 5ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் பாஜ, காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டன. இந்த முறை ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைத்து விட வேண்டும் என்ற முனைப்பில் பாஜ கட்சி செயல்பட்டு வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜகவின் முக்கிய தலைவர்கள் தீவிர பிரச்சாரம் செய்தனர். இதே போல் காங்கிரஸ், ஆளும் தேசிய ஜனநாயக கட்சி தலைவர்களும் தீவிரமாக வாக்கு சேகரித்தனர். இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் நேற்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.
ஜார்கண்ட் மாநிலத்திலும் நாளை இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. ராஜ்மகால், பொய்ரோ, பர்கய்ட், விடிபரா, பக்கூர், மகேஷ்பூர், சிக்கரிபரா, நலா, ஜம்தரா, தும்கா, ஜமா, ஜர்முண்டி, சரத், போர்யாகத், கோடா, மகாக்மா உள்ளிட்ட 18 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. பாஜ, காங்கிரஸ், ஜார்கண்ட முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகள் இடையே இங்கு பலத்த போட்டி நிலவுகிறது. கட்சிகளின் தலைவர்கள் தீ விர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் நேற்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில ் வருகிற 23 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து