முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டம்: உளவுத்துறை மீண்டும் எச்சரிக்கை

வியாழக்கிழமை, 18 டிசம்பர் 2014      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - அமெரிக்க அதிபர் ஒபாமா அடுத்த மாதம் இந்திய குடியரசு தின விழா கொண்டாட்டங்களில் பங்கேற்க டெல்லி வரவுள்ளார். அவர் வருகைக்கு 40 நாட்கள் உள்ள நிலையில் இந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல் ஒன்றை நடத்த பாகிஸ்தானில் இயங்கும் லஸ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர்.
பாகிஸ்தான் தீவிரவாதகளின் திட்டத்தை அறிந்த அமெரிக்க உளவுத்துறை இந்தியாவை உஷார்படுத்தியது. இதையடுத்து டெல்லியில் ஒபாமா செல்லக்கூடிய இடங்கள் பாதுகாப்பு வளையத்துக்குள் கொ்டு வரப்பட்டு விட்டன. இந்த நிலையில் தீவிரவாதிகளின் தாக்குதல் அபாயம் பற்றி உளவுத்துறை மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
லஸ்கர் இ தொய்பா தீ விரவாத இயக்க தலைவன் ஹபீஸ் சயீது பேசியதன் அடிப்படையில் நேற்று முன்தினம் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹபீஸ் சயீது தன் பேச்சில் இந்திய உளவுத்துறையினர் டெல்லியில் தாக்குதல் நடத்தி விட்டு அந்த பழியை லஸ்கர் இ தொய்பா மீது சுமத்துவார்கள் என்று கூறியுள்ளான். எனவே அவன் தலைமையிலான தீவிரவாதிகள் டெல்லியில் தாக்கு தலுக்கு திட்டமிட்டுருப்பது உறுதியாகி உள்ளது.
இந்தியன் முஜாகிதீன் மற்றும் சிமி தீ விரவாதிகளுடன் இணைந்து லஸ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் டெல்லியில் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. குறிப்பாக டெல்லி ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 2 நட்சத்திர ஓட்டல்களை தகர்க்க தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக கருதப்படுகிறது.
லஸ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் சமீபத்தில் தகவல்களை பரிமாறி கொண்ட போது ஓட்டல் என்றும் ஹைவே என்றும் அடிக்கடி கூறியுள்ளனர். இந்த இரு வார்த்தைகளும் அவர்களது சங்கேத வார்த்தைகளும் அவர்களது சங்கேத வார்த்தைகளாக இருக்க கூ டும் என்று அமெரிக்க இந்திய உளவுத்துறையினர் கருதுகிறார்கள். தீவிரவாதிகளின் சதி திட்டத்தை துல்லியமாக கண்டறிய அமெரிக்க இந்திய உளவுத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து ஆலோசித்து வருகிறார்கள்.
ஒபாமா வருகைக்கு முன்பு இந்தியாவில் மிக பெரிய தாக்குதலுக்கு தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பது உறுதியாகி இருப்பதால் எல்லா மாநில அரசுகளும் விழிப்புடன் இருக்குமாறு மத்திய உள்துறை அறிவுறுத்தி உள்ளது. மத்திய ராணுவ நிலைகள், ரயில் நிலையங்கள், தியேட்டர்கள், சந்தைகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க உத்த ரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியா முழுவதும் உஷார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. டெல்லி ஆக்ரா தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பும் கண்காணிப்பும் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள 2 ஓட்டல்கள் என்று பெயர் குறிப்பிடாமல் தீவிரவாதிகள் தகவல் பரிமாற்றம் செய்துள்ளதால் டெல்லியில் உள்ள அனைத்து நட்சத்திர ஓட்டல்களும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து