முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீவில்லி. வைத்தியநாத சுவாமி கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா

வியாழக்கிழமை, 18 டிசம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

ஸ்ரீவில்லி - ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாதசுவாமி கோயிலில் சனிப் பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் தனி சன்னதி கண்டுள்ள சனி பகவானுக்கு சனிப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி ரகு என்ற கைலாச பட்டர் சனி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார். இந்த சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சனி பகவானை வழிபட்டனர். பின்னர் இரவு 7 மணிக்கு ஆன்மீக சொற்பொழிவாளர் டாக்டர் கே.பி. முத்துச்சாமி ஏற்பாட்டின்படி மதுரை பிரபல ஜோதிடர் பி. பாலசுப்பிரமணியன் சனி பகவானின் மகிமைகள் என்ற தலைப்பில் ஆன்மீக சொற்பொழிவாற்றினார். 12 ராசிகளுக்கும் நிகழவிருக்கும் சனிப்பெயர்ச்சி பலன்களை அவர் விளக்கமாக எடுத்துரைத்தார். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் ராமராஜா, செயல் அலுவலர்ஸ்(பெறுப்பு) அறிவழகன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து