முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாவூத் இப்ராஹிமை ஒப்படையுங்கள்: வெங்கையா கோரிக்கை

வியாழக்கிழமை, 18 டிசம்பர் 2014      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - ஹபீஸ் சையது, தாவூத் இப்ராஹிம் போன்றோரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் ராணுவப் பள்ளியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 132 குழந்தைகள் உள்பட 141 பேர் பலியாகினர். இதனையடுத்து, பிரதமர் நவாஸ் ஷெரீப் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தினார். இதில் பெஷாவர் தாக்குதல் மட்டுமன்றி நாடு எதிர்நோக்கியுள்ள பிற சவால்கள் குறித்து தலைவர்கள் விவாதித்தனர்.
பிறகு நிருபர்களிடம் பேசிய நவாஸ் ஷெரீப், "தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிட எல்லா கட்சி களும் ஒன்றுபட்டு நிற்கின்றன. தீவிரவாதத்தை வேரோடு ஒழிப் பதற்கான வழிமுறைகள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும்" என்றார்.
இதனைக் குறிப்பிட்டு பேசிய வெங்கய்ய நாயுடு, "தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பாகிஸ்தான் உறுதியாக இருந்தால் ஹபீஸ் சையது, தாவூத் இப்ரஹிம் போன்றோரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள இதுவே சிறந்த தருணம் என்பதை நவாஸ் உணர வேண்டும்" என கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து