முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்மா பேரவை மக்கள் முகாம்: தமிழகம் முழுவதும் நாளை பிரச்சாரம்

வியாழக்கிழமை, 18 டிசம்பர் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை - மக்களின் முதல்வர் அம்மாவின் சாதனைகளை பறைசாற்றிடவும், வரும் சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத முழு வெற்றியை பெற்றிடவும் அம்மா பேரவை மக்கள் முகாமின் வெற்றி முழக்கம் தமிழகம் முழுவதும் நாளை 20ம் தேதி நடக்கிறது. இதில் பங்கேற்று முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுபவர்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
எல்லோரும் எல்லா வளமும் பெற வேண்டும். இங்கு இல்லாமை இல்லாது எனும் நிலை வேண்டும் என்கின்ற வரலாற்று பொன்மொழிக்கேற்ப தமிழக மக்கள் எந்தவொரு இலவசத்திற்கும் எவரிடமும் கையேந்த கூடாது என்ற உயரிய எண்ணத்துடன் தமிழக மக்களுக்கு பல திட்டங்களை நாள்தோறும் அள்ளி அள்ளி கொடுத்து சரித்திர சாதனைகளை மக்களின் முதல்வர் அம்மா படைத்து வருகிறார். வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்தி இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்கியது மட்டுமல்லாது, தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை மக்களின் முதல்வர் அம்மா உயர்த்தி வருகிறார்.மக்களின் முதல்வர் அம்மாவின் வரலாற்று சிறப்பு மிக்க சாதனைகளுக்கு மகுடம் சூட்டும் வகையில் நடைபெற்ற 16வது நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட்டு அதிமுகவை வரலாற்று சிறப்பு மிக்க இமாலய வெற்றி பெற செய்த தமிழக மக்களுக்கு அதிமுக பொதுச் செயலாளரும், மக்களின் முதல்வருமான அம்மா இன்னும் பல திட்டங்களை தொடர்ந்து வழங்கி வருகிறார்.
மக்களின் முதல்வர் அம்மாவின் ஆணைக்கிணங்க அடுத்து வருகின்ற சட்டசபை தேர்தலில் 100 சதவீதம் வெற்றியை அதிமுக பெற்றிட தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்களின் அம்மாவின் மக்கள் நலன் காக்கும் வளர்ச்சி திட்டங்கள், முன்னோடி திட்டங்கள், வழிகாட்டும் திட்டங்கள், வரலாற்று சிறப்புமிக்க திட்டங்கள், சரித்திர சாதனை படைத்திருக்கின்ற பல்வேறு திட்டங்கள் குறித்து தமிழகம் முழுவதும் வீதி வீதியாக வீடு, வீடாக பொதுமக்களிடத்தில் எடுத்து சொல்கின்ற வகையில் திண்ணை பிரச்சாரங்கள், தெருமுனை கூட்டங்கள், சாதனை விளக்க பேரணிகள், சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள், சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள், பேனர்கள் என பல்வேறு வழிகளில் மக்களின் முதல்வர் அம்மாவின் உலகம் போற்றும் சரித்திர சாதனைகளை விளக்கிட அம்மா பேரவை மக்கள் முகாமினை தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடத்திட கடந்த ஜூலை 3ம் தேதி முதல் ஜூலை 5ம் தேதி வரை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பேரவை மாநில செயலாளரும், வருவாய் துறை அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் தலைமையில் நடைபெற்ற தமிழகத்தில் உள்ள 52 பேரவை மாவட்ட செயலாளர்களுக்கான 3 நாள் செயல்திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் மக்களின் முதல்வர் அம்மாவின் சரித்திர சாதனைகளை மக்களிடத்தில் எடுத்து சென்று பறைசாற்றிடவும், தீயசக்தி கருணாநிதியின் மக்கள் விரோத போக்கை தோலுரித்து காட்டிடவும் தமிழகம் முழுவதும் வீடு, வீடாக, வீதி வீதியாக பட்டி தொட்டியெங்கும் நடைபெறும் அம்மா பேரவை மக்கள் முகாம் தமிழகம் முழுவதும் பேரவை மாவட்டங்களில் நாளை நடக்கிறது.
இந்த முகாமில் பங்கேற்று தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுபவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அந்த விபரங்கள் வருமாறு:-
வட சென்னை வடக்கு மாவட்டம், அம்மா பேரவை மக்கள் முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுபவர்கள்: கழக அவைத் தலைவர் இ. மதுசூதனன், மாவட்ட கழக செயலாளர் டி.ஜி. வெங்கடேஷ்பாபு எம்.பி. நிகழ்ச்சி ஏற்பாடு: மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ். நடைபெறும் இடம்: ஆர்.கே. நகர் பகுதி
வட சென்னை தெற்கு மாவட்டம், அம்மா பேரவை மக்கள் முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுபவர்கள்: கழக அவைத் தலைவர் இ. மதுசூதனன், மாவட்ட கழக செயலாளர் நா. பாலகங்கா. நிகழ்ச்சி ஏற்பாடு: மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளர் எம். முகமது இம்தியாஸ் எம்.சி., நடைபெறும் இடம்.
தென் சென்னை வடக்கு மாவட்டம், அம்மா பேரவை மக்கள் முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுபவர்கள்: கழக அமைப்பு செயலாளர்கள் சி. பொன்னையன், விசாலாட்சி நெடுஞ்செழியன், கழக இலக்கிய அணி செயலாளரும், சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் பா. வளர்மதி, கழக அமைப்பு செயலாளரும், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் எஸ். கோகுல இந்திரா. கழக மாணவரணி செயலாளர் எஸ்.ஆர். விஜயகுமார் எம்.பி., கழக அமைப்பு செயலாளர் ஆதி ராஜாராம், கழக தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கே. சுவாமிநாதன், மாவட்ட கழக செயலாளர் வி.பி கலைராஜன் எம்எல்ஏ. நிகழ்ச்சி ஏற்பாடு: மாவட்ட புரட்சி தலைவி அம்மா பேரவை செயலாளர் ஜி. ரவிக்குமார். நடைபெறும் இடம்: திருவல்லிக்கேணி பகுதி .
தென்சென்னை தெற்கு மாவட்டம், அம்மா பேரவை மக்கள் முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுபவர்கள்: கழக இலக்கிய அணி செயலாளரும், சமூக நலத்துறை மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் பா. வளர்மதி, கழக மருத்துவ அணி தலைவர் வா. மைத்ரேயன் எம்.பி., கழக அமைப்பு செயலாளரும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான எஸ். கோகுல இந்திரா, கழக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஏ. நவநீதகிருஷ்ணன் எம்.பி., கழக அமைப்பு சாரா ஓட்டுனரணி செயலாளர் ஆர். கமலக்கண்ணன், தென் சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளர் விருகை வி.என். ரவி. நிகழ்ச்சி ஏற்பாடு: மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளர் ஏ.என். புருஷோத்தமன். நடைபெறும் இடம்: மயிலாப்பூர் பகுதி
காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம், அம்மா பேரவை மக்கள் முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுபவர்கள்: மாவட்ட கழக செயலாளர், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் டி.கே.எம். சின்னையா, நிகழ்ச்சி ஏற்பாடு: மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளர் ஆர். கபாலீஸ்வரன். நடைபெறும் இடம்: அனகாபுத்தூர் நகரம்
காஞ்சிபுரம் மத்திய மாவட்டம், அம்மா பேரவை மக்கள் முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுபவர்கள்: மாவட்ட கழக செயலாளர், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் டி.கே.எம். சின்னையா, மாவட்ட கழக செயலாளர் சி.வி.என். குமாரசாமி. நிகழ்ச்சி ஏற்பாடு: மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளர் ஆனூர் வி. பக்தவச்சலம் எம்.சி., நடைபெறும் இடம்: அச்சரபாக்கம்
காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம், அம்மா பேரவை மக்கள் முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுபவர்கள்: மாவட்ட கழக செயலாளர், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் டி.கே.எம். சின்னையா. மாவட்ட கழக செயலாளர் வாலாஜாபாத் பா. கணேசன் எம்.எல்.ஏ. நிகழ்ச்சி ஏற்பாடு: மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளர் கே.யூ.எஸ். சோமசுந்தரம். நடைபெறும் இடம்: காஞ்சிபுரம் நகரம்
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், அம்மா பேரவை மக்கள் முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுபவர்கள்: கழக மருத்துவரணி செயலாளர் டாக்டர் பி.வேணுகோபால் எம்.பி,கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் வி.அலெக்சாண்டர், மாவட்ட கழக செயலாளர் சிறுணியம் பி. பலராமன். நிகழ்ச்சி ஏற்பாடு: மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளர் அலெக்ஸ் எஸ்.பரமசிவம் நடைபெறும் இடம்:திருவெற்றியூர் நகரம்
திருவள்ளூர் மேற்கு மாவட்டம், அம்மா பேரவை மக்கள் முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுபவர்கள்: கழக மருத்துவரணி செயலாளர் டாக்டர் பி. வேணுகோபால் எம்.பி., கழக எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் வி. அலக்ஸாண்டர், மாவட்ட கழக செயலாளர், பால்வளத்துறை அமைச்சர் பி.வி.ரமணா, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ். அப்துல் ரஹீம். நிகழ்ச்சி ஏற்பாடு: மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளர் என்எஸ்ஏ இரா.மணிமாறன் எம்.எல்.ஏ நடைபெறும் இடம்: திருவள்ளூர் நகரம்.
வேலூர் புறநகர் கிழக்கு மாவட்டம், அம்மா பேரவை மக்கள் முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுபவர்கள்: மாவட்ட கழக செயலாளர்,பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி, மாவட்ட கழக செயலாளர் என்.ஜி.பார்த்திபன் நிகழ்ச்சி ஏற்பாடு: மாவட்ட அம்மா பேரவை நடைபெறும் இடம்: காவேரிபாக்கம் ஒன்றியம்.
வேலூர் புறநகர் மேற்கு மாவட்டம், அம்மா பேரவை மக்கள் முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுபவர்கள்: மாவட்ட கழக செயலாளர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி. நிகழ்ச்சி ஏற்பாடு: மாவட்ட அம்மா பேரவை நடைபெறும் இடம்: பேரானம்பட்டு ஒன்றியம்.
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், அம்மா பேரவை மக்கள் முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுபவர்கள்: மாவட்ட கழக செயலாளர், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் முக்கூர் என். சுப்பிரமணியன். நிகழ்ச்சி ஏற்பாடு: மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளர் சேவூர் எஸ். ராமச்சந்திரன். நடைபெறும் இடம்: அனங்காவூர் செய்யாறு.
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், அம்மா பேரவை மக்கள் முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுபவர்கள்: மாவட்ட கழக செயலாளர், வேளாண்மை துறை அமைச்சர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி. நிகழ்ச்சி ஏற்பாடு: மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளர் பெருமாள்நகர் கே. ராஜன். நடைபெறும் இடம்: திருவண்ணாமலை நகரம்
கடலூர் கிழக்கு மாவட்டம், அம்மா பேரவை மக்கள் முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுபவர்கள்: மாவட்ட கழக செயலாளர், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் எம்.சி. சம்பத். நிகழ்ச்சி ஏற்பாடு: மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளர் பி. ரவிச்சந்திரன். நடைபெறும் இடம்: விருதாச்சலம் நகரம்.
கடலூர் மேற்கு மாவட்டம், அம்மா பேரவை மக்கள் முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுபவர்கள்: கழக மீனவர் பிரிவு செயலாளர் கே.கே. கலைமணி, மாவட்ட கழக செயலாளர் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் எம்.சி. சம்பத், மாவட்ட கழக செயலாளர் ஆ. அருண்மொழித்தேவன் எம்.பி. நிகழ்ச்சி ஏற்பாடு: மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளர் எம். உமாமகேஸ்வரன். நடைபெறும் இடம்:சிதம்பரம் நகரம்.
விழுப்புரம் வடக்கு மாவட்டம், அம்மா பேரவை மக்கள் முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுபவர்கள்: மாவட்ட கழக செயலாளர், ஊரக தொழில் துறை அமைச்சர் ப. மோகன், மாவட்ட கழக செயலாளர் டாக்டர் ஆர். லெட்சுமணன் எம்.பி. நிகழ்ச்சி ஏற்பாடு: மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளர் எஸ். முரளி என்ற ரகுராமன். நடைபெறும் இடம்: மரக்கானம் ஒன்றியம்
விழுப்புரம் தெற்கு மாவட்டம், அம்மா பேரவை மக்கள் முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுபவர்கள்: மாவட்ட கழக செயலாளர், ஊரக தொழில்துறை அமைச்சர் ப. மோகன். நிகழ்ச்சி ஏற்பாடு: மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளர் கே.ஜி.பி. ஞானமூர்த்தி முன்னாள் எம்.எல்.ஏ. நடைபெறும் இடம்: திருநாவலூர் ஒன்றியம்.
கிருஷ்ணகிரி மாவட்டம், அம்மா பேரவை மக்கள் முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுபவர்கள்: மாவட்ட கழக செயலாளர் வி. கோவிந்தராஜ். நிகழ்ச்சி ஏற்பாடு: மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளர் வி. கோவிந்தராஜ். நடைபெறும் இடம்:
தருமபுரி மாவட்டம், அம்மா பேரவை மக்கள் முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுபவர்கள்: கழக தலைமை நிலைய செயலாளர், உயர்கல்வி துறை அமைச்சர் பி. பழனியப்பன், மாவட்ட கழக செயலாளர் பூக்கடை எம். முனுசாமி. நிகழ்ச்சி ஏற்பாடு: மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளர் எஸ். தென்னரசு. நடைபெறும் இடம்: அரூர் ஒன்றியம்.
சேலம் மாநகர் மாவட்டம், அம்மா பேரவை மக்கள் முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுபவர்கள்: மாவட்ட கழக செயலாளர், நெடுஞ்சாலை துறை அமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, கழக அமைப்பு செயலாளர் செ. செம்மலை, மாவட்ட கழக செயலாளர் எம்.கே. செல்வராஜ். நிகழ்ச்சி ஏற்பாடு: மாவட்ட புரட்சி தலைவி அம்மா பேரவை செயலாளர் ஜி. வெங்கடாசலம் எம்.எல்.ஏ. நடைபெறும் இடம்: அம்மாபேட்டை பகுதி.
சேலம் புறநகர் மாவட்டம், அம்மா பேரவை மக்கள் முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுபவர்கள்: மாவட்ட கழக செயலாளர், நெடுஞ்சாலை துறை அமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி. நிகழ்ச்சி ஏற்பாடு: மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளர் ஆர். இளங்கோவன். நடைபெறும் இடம்: பெத்தநாயக்கம் பாளையம் ஒன்றியம்
நாமக்கல் மாவட்டம், அம்மா பேரவை மக்கள் முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுபவர்கள்: மாவட்ட கழக செயலாளர் தொழில்துறை அமைச்சர் பி. தங்கமணி. நிகழ்ச்சி ஏற்பாடு: மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளர். இ. ஆர். சந்திரசேகர். நடைபெறும் இடம்: புதுசத்திரம் ஒன்றியம்
ஈரோடு மாநகர் மாவட்டம், அம்மா பேரவை மக்கள் முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுபவர்கள்: மாவட்ட கழக செயலாளர் ஆர்.என். கிட்டுசாமி எம்.எல்.ஏ. நிகழ்ச்சி ஏற்பாடு: மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளர் கே. பொன்னுசாமி எம்.எல்.ஏ. நடைபெறும் இடம்: தாராபுரம் நகரம்
ஈரோடு புறநகர் மாவட்டம், அம்மா பேரவை மக்கள் முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுபவர்கள்: மாவட்ட கழக செயலாளர், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி. வெங்கடாசலம். நிகழ்ச்சி ஏற்பாடு: மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளர் எஸ்.எஸ். ஆறுமுகம். நடைபெறும் இடம்: பவானி ஒன்றியம்.
திருப்பூர் மாநகர் மாவட்டம், அம்மா பேரவை மக்கள் முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுபவர்கள்: மாவட்ட கழக செயலாளர், வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன். நிகழ்ச்சி ஏற்பாடு: மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளர் வி. ராதாகிருஷ்ணன் . நடைபெறும் இடம்: திருப்பூர் வடக்கு தொகுதி 2 -வது வார்டு.
திருப்பூர் புறநகர் மாவட்டம், அம்மா பேரவை மக்கள் முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுபவர்கள்: கழக தேர்தல் பிரிவு செயலாளர், மாவட்ட கழக செயலாளர், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை துணை தலைவர் பொள்ளாச்சி வி. ஜெயராமன். நிகழ்ச்சி ஏற்பாடு: மாவட்ட புரட்சி தலைவி அம்மா பேரவை செயலாளர் ஜி.வி. வாசுதேவன். நடைபெறும் இடம்: பல்லடம் நகரம்.
கோவை மாநகர் மாவட்டம், அம்மா பேரவை மக்கள் முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுபவர்கள்: அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர். சின்னசாமி எம்.எல்.ஏ, கழக அமைப்பு செயலாளர் ஏ.கே. செல்வராஜ், மாவட்ட கழக செயலாளர், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம் நீதிமன்றங்கள், சிறைத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மாவட்ட கழக செயலாளர் கணபதி ப. ராஜ்குமார். நிகழ்ச்சி ஏற்பாடு: மாவட்ட புரட்சி தலைவி அம்மா பேரவை செயலாளர் பி.ஆர்.ஜி. அருண்குமார். நடைபெறும் இடம்: பெரியநாயக்கம் பாளையம் ஒன்றியம்.
கோவை புறநகர் மாவட்டம், அம்மா பேரவை மக்கள் முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுபவர்கள்: மாவட்ட கழக செயலாளர், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம் நீதிமன்றங்கள் மற்றும் சிறைத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி. நிகழ்ச்சி ஏற்பாடு: மாவட்ட அம்மா பேரவை. நடைபெறும் இடம்: குளியமுத்தூர் பகுதி.
நீலகிரி மாவட்டம், அம்மா பேரவை மக்கள் முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுபவர்கள்: மாவட்ட கழக செயலாளர் எஸ். கலைசெல்வன். நிகழ்ச்சி ஏற்பாடு: மாவட்ட புரட்சி தலைவி அம்மா பேரவை செயலாளர் புத்திசந்திரன் எம்.எல்.ஏ. நடைபெறும் இடம்: உதகை ஒன்றியம்.
திருச்சி மாநகர் மாவட்டம், அம்மா பேரவை மக்கள் முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுபவர்கள்: கழக இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளர் ப. குமார் எம்.பி. காதி மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் டி.பி. பூனாட்சி, மாவட்ட கழக செயலாளர், அரசு தலைமை கொறடா ஆர். மனோகரன். நிகழ்ச்சி ஏற்பாடு: மாவட்ட புரட்சி தலைவி அம்மா பேரவை செயலாளர் ஜெ. சீனிவாசன் எம்.சி. நடைபெறும் இடம்:மலைக்கோட்டை பகுதி.
திருச்சி புறநகர் மாவட்டம், அம்மா பேரவை மக்கள் முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுபவர்கள்: காதி மற்றும் கிராம தொழிற்துறை அமைச்சர் டி.பி. பூனாட்சி, மாவட்ட கழக செயலாளர் டி. ரத்தினவேல் எம்.பி. நிகழ்ச்சி ஏற்பாடு: மாவட்ட புரட்சி தலைவி அம்மா பேரவை செயலாளர் சமயபுரம் தி. ராமு. நடைபெறும் இடம்: மணச்சநல்லூர் ஒன்றியம்.
பெரம்பலூர் மாவட்டம், அம்மா பேரவை மக்கள் முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுபவர்கள்: மாவட்ட கழக செயலாளர், தமிழ்நாடு மாநில வேளாண் விற்பனை வாரிய தலைவர் மா. ரவிச்சந்திரன். நிகழ்ச்சி ஏற்பாடு: மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளர் எஸ். கார்த்திகேயன். நடைபெறும் இடம்: பெரம்பலூர் நகரம்.
அரியலூர் மாவட்டம், அம்மா பேரவை மக்கள் முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுபவர்கள்: மாவட்ட கழக செயலாளர் தாமரை எஸ். ராஜேந்திரன். நிகழ்ச்சி ஏற்பாடு: மாவட்ட புரட்சி தலைவி அம்மா பேரவை செயலாளர் இ.எஸ்.கே. அன்பழகன். நடைபெறும் இடம்: ஜெயகொண்டம் ஒன்றியம்.
கரூர் மாவட்டம், அம்மா பேரவை மக்கள் முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுபவர்கள்: கழக கொள்கை பரப்பு செயலாளர், மக்களவை துணை சபாநாயகர் மு. தம்பிதுரை எம்.பி., மாவட்ட கழக செயலாளர், போக்குவரத்து துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி. நிகழ்ச்சி ஏற்பாடு: மாவட்ட புரட்சி தலைவி அம்மா பேரவை செயலாளர் எஸ். காமராஜ் எம்.எல்.ஏ. நடைபெறும் இடம்: கிருஷ்ணராயபுரம் நகரம்
தஞ்சாவூர் வடக்கு மாவட்டம், அம்மா பேரவை மக்கள் முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுபவர்கள்: கழக விவசாய பிரிவு தலைவர் துரை கோவிந்தராஜன், கழக விவசாய பிரிவு செயலாளர் கு. தங்கமுத்து, மாவட்ட கழக செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம், மாவட்ட கழக செயலாளர் எம். ரங்கசாமி எம்.எல்.ஏ. நிகழ்ச்சி ஏற்பாடு: மாவட்ட புரட்சி தலைவி அம்மா பேரவை செயலாளர் எல். தயாளன். நடைபெறும் இடம்: பூதலூர் ஒன்றியம்
தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், அம்மா பேரவை மக்கள் முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுபவர்கள்: மாவட்ட கழக செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம். நிகழ்ச்சி ஏற்பாடு: மாவட்ட புரட்சி தலைவி அம்மா பேரவை செயலாளர் மா. சேகர். நடைபெறும் இடம்: திருவோணம் ஒன்றியம்.
நாகப்பட்டினம் மாவட்டம், அம்மா பேரவை மக்கள் முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுபவர்கள்: மாவட்ட கழக செயலாளர், மீன்வளத்துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால். நிகழ்ச்சி ஏற்பாடு: மாவட்ட புரட்சி தலைவி அம்மா பேரவை செயலாளர் வி.ஜி.கே. செந்தில்நாதன். நடைபெறும் இடம்:மயிலாடுதுறை நகரம்
திருவாரூர் மாவட்டம், அம்மா பேரவை மக்கள் முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுபவர்கள்: மாவட்ட கழக செயலாளர், உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ். நிகழ்ச்சி ஏற்பாடு: மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளர் பொன். வாசுகிராம். நடைபெறும் இடம்: நீடாமங்களம் ஒன்றியம்.
புதுக்கோட்டை மாவட்டம், அம்மா பேரவை மக்கள் முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுபவர்கள்: மாவட்ட கழக செயலாளர், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் ந. சுப்ரமணியன். நிகழ்ச்சி ஏற்பாடு: மாவட்ட புரட்சி தலைவி அம்மா பேரவை செயலாளர் ஆர். நெடுஞ்செழியன் முன்னாள் எம்.எல்.ஏ. நடைபெறும் இடம்: திருவரங்குளம் ஒன்றியம்.
மதுரை மாநகர் மாவட்டம், அம்மா பேரவை மக்கள் முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுபவர்கள்: மாநகர் மாவட்ட கழக செயலாளர், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ. நிகழ்ச்சி ஏற்பாடு: மாவட்ட புரட்சி தலைவி அம்மா பேரவை செயலாளர் கா. டேவிட் அண்ணாதுரை. நடைபெறும் இடம்:தெற்கு 1ம் பகுதி.
மதுரை புறநகர் மாவட்டம், அம்மா பேரவை மக்கள் முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுபவர்கள்: மாநகர் மாவட்ட கழக செயலாளர், கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, புறநகர் மாவட்ட கழக செயலாளர் எம்.முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. நிகழ்ச்சி ஏற்பாடு: மாவட்ட புரட்சி தலைவி அம்மா பேரவை செயலாளர் கே. தமிழரசன் எம்.எல்.ஏ. நடைபெறும் இடம்: வாடிப்பட்டி பேரூராட்சி.
தேனி மாவட்டம், அம்மா பேரவை மக்கள் முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுபவர்கள்: கழக பொருளாளர், நிதி மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், மாவட்ட கழக செயலாளர் டி.டி. சிவகுமார். நிகழ்ச்சி ஏற்பாடு: மாவட்ட புரட்சி தலைவி அம்மா பேரவை செயலாளர் டி.ஆர்.என். வரதராஜன். நடைபெறும் இடம்: ஆண்டிப்பட்டி பேரூராட்சி.
திண்டுக்கல் மாவட்டம், அம்மா பேரவை மக்கள் முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுபவர்கள்: மாவட்ட கழக செயலாளர், மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சர் நத்தம் இரா. விசுவநாதன். நிகழ்ச்சி ஏற்பாடு: மாவட்ட புரட்சி தலைவி அம்மா பேரவை செயலாளர் வி.டி. ராஜன் எம்.சி. நடைபெறும் இடம்: திண்டுக்கல் நகரம்.
விருதுநகர் மாவட்டம், அம்மா பேரவை மக்கள் முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுபவர்கள்: கழக புரட்சி தலைவி அம்மா பேரவை செயலாளர், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மாவட்ட கழக செயலாளர், செய்தி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி. நிகழ்ச்சி ஏற்பாடு: மாவட்ட புரட்சி தலைவி அம்மா பேரவை செயலாளர் பி.பி. செல்வசுப்பிரமணியராஜா. நடைபெறும் இடம்: விருதுநகர் ஒன்றியம்.
சிவகங்கை மாவட்டம், அம்மா பேரவை மக்கள் முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுபவர்கள்: மாவட்ட கழக செயலாளர் பிஆர். செந்தில்நாதன் எம்.பி. நிகழ்ச்சி ஏற்பாடு: மாவட்ட புரட்சி தலைவி அம்மா பேரவை செயலாளர் கே.ஆர். அசோகன். நடைபெறும் இடம்:கல்லல் ஒன்றியம்.
இராமநாதபுரம் மாவட்டம், அம்மா பேரவை மக்கள் முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுபவர்கள்: கழக சிறுபான்மையினர் நல பிரிவு செயலாளர் ஆ. அன்வர் ராஜா எம்.பி., விளையாட்டு துறை அமைச்சர் டாக்டர் சுந்தரராஜ், மாவட்ட கழக செயலாளர் ஆர்.தர்மர் நிகழ்ச்சி ஏற்பாடு: மாவட்ட புரட்சி தலைவி அம்மா பேரவை செயலாளர் சேதுபாலசிங்கம். நடைபெறும் இடம்: இராமநாதபுரம் நகரம்
திருநெல்வேலி மாநகர் மாவட்டம், அம்மா பேரவை மக்கள் முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுபவர்கள்: கழக அமைப்பு செயலாளர் பி.எச். பாண்டியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி. செந்தூர் பாண்டியன், மாவட்ட கழக செயலாளர் எஸ். முத்துகருப்பன் எம்.பி. நிகழ்ச்சி ஏற்பாடு: மாவட்ட புரட்சி தலைவி அம்மா பேரவை செயலாளர் சுதா கே. பரமசிவன். நடைபெறும் இடம்: நெல்லை பகுதி.
திருநெல்வேலி புறநகர் மாவட்டம், அம்மா பேரவை மக்கள் முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுபவர்கள்: கழக அமைப்பு செயலாளர் பி.எச். பாண்டியன், இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் பி. செந்தூர் பாண்டியன், மாவட்ட கழக செயலாளர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் ஆர். முருகையா பாண்டியன். நிகழ்ச்சி ஏற்பாடு: மாவட்ட புரட்சி தலைவி அம்மா பேரவை செயலாளர் இ. நடராஜன். நடைபெறும் இடம்: பாளையங்கோட்டை ஒன்றியம்
தூத்துக்குடி மாவட்டம், அம்மா பேரவை மக்கள் முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுபவர்கள்: கழக மகளிரணி செயலாளர் எல். சசிகலா புஷ்பா எம்.பி., மாவட்ட கழக செயலாளர், சுற்றுலா துறை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன், கழக மீனவர் பிரிவு இணை செயலாளர் ஜெனிபர் சந்திரன். நிகழ்ச்சி ஏற்பாடு: மாவட்ட புரட்சி தலைவி அம்மா பேரவை செயலாளர் கடம்பூர் செ. ராஜூ எம்.எல்.ஏ. நடைபெறும் இடம்: கோவில்பட்டி நகரம்
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம், அம்மா பேரவை மக்கள் முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுபவர்கள்: அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அ. தமிழ்மகன் உசேன், மாவட்ட கழக செயலாளர் என். தளவாய் சுந்தரம். நிகழ்ச்சி ஏற்பாடு: மாவட்ட அம்மா பேரவை நடைபெறும் இடம்: நாகர்கோவில் நகரம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து