முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துப்பாக்கி சுடுதல் போட்டி: பிந்த்ராவுக்கு வெண்கலம்

வியாழக்கிழமை, 18 டிசம்பர் 2014      விளையாட்டு
Image Unavailable

புனே - மகராஷ்டிரத்தின் புனேயில் நடைபெற்று வரும் தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் அபினவ் பிந்த்ரா வெண்கலப்பதக்கம் வென்றார். இப்போட்டியின் போது ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் பிரிவு நடைபெற்றது. இதில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரா 183.8 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தை பிடித்தார். ராணுவத்தை சேர்ந்த ஹரியம் 205 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை தட்டி சென்றார். ககன் தரங் நான்காவது இடத்தை பிடித்தார். 50 மீட்டர் ரைபிள் அணிகள் பிரிவில் ராணுவத்தை சேர்ந்த செயின்சிங், சுரேந்திர சிங் ரத்தோட், சுஷில் கேலே ஆகியோர் அடங்கிய அணி 1855.3 புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்தது. உத்தரபிரதேச அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து