முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வித்தொகை அதிகரிப்பு

வியாழக்கிழமை, 18 டிசம்பர் 2014      இந்தியா
Image Unavailable

சென்னை - இந்திய மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை வரும் 2015ம் ஆண்டில் ரூ. 15 கோடியாக உயர்த்த பிரிட்டன் முடிவு செய்துள்ளது என சென்னையில் உள்ள பிரிட்டன் துணை தூதரகம் அறிவித்துள்ளது. மேலும் வரும் 2015, பிப்ரவரி மாதம் மாபெரும் கல்வி கண்காட்சியை பிரிட்டன் கல்வி நிறுவனங்கள் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தது.
இது குறித்து சென்னையில் பிரிட்டன் துணை தூதர் பரத் ஜோஷி நிருபர்களிடம் கூறுகையில்,
பிரிட்டன் கல்வி நிறுவனங்களில் படிக்க வரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் குறைந்து வருகிறது. இதை அதிகரிக்க செய்யும் வகையில் இந்திய மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை அளவை உயர்த்த பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் எப்போதும் இல்லாத அளவுக்கு 750 வகையான கல்வி உதவி தொகைகள் இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் ரூ. 10 கோடி மதிப்பிலான கல்வி உதவித் தொகைகள் வழங்கப்பட்டன. வரும் 2015ம் ஆண்டுக்கு இந்த அளவை ரூ. 15 கோடியாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனை சேர்ந்த 57 பிரபல கல்வி நிறுவனங்கள் மூலம் பொறியியல், சட்டம், வணிகம், கலை, அறிவியல் என பல்வேறு துறைகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் 401 வகையான கல்வி உதவித் தொகை திட்டங்கள் வழங்கப்படவுள்ளன.
இது குறித்த விவரங்களை www.knowledgeisgreat.in என்ற இணையதளத்தின் மூலமோ அல்லது அருகில் உள்ள பிரிட்டன் தூதரகத்தை தொடர்பு கொண்டோ அறியலாம். மேலும் வருகிற 2015 ம் ஆண்டு பிப்ரவரியில் மாபெரும் கல்வி கண்காட்சி நடத்தப்படவுள்ளது. பிப்ரவரி 2ம் தேதியன்று சென்னை கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஓட்டலிலும், பிப்ரவரி 13ம் தேதி கோவையில் உள்ள தாஜ் சூர்யா ஓட்டலிலும் இந்த கல்வி கண்காட்சி நடத்தப்படும். இதில் பிரிட்டனை சேர்ந்த 65 கல்வி நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. இந்த கல்வி கண்காட்சிக்கு அனுமதி இலவசம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து