முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொங்கலுக்கான விலையில்லா வேட்டி சேலை உற்பத்தி குறித்து ஆய்வு

வியாழக்கிழமை, 18 டிசம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை - 2015-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின்கீழ் வேட்டி சேலைகளை உற்பத்தி செய்தல் தொடர்பான திட்ட முன்னேற்றம் குறித்த ஆய்வு கைத்தறி மற்றும் துணிநூல் இயக்குநர் அலுவலக கூட்ட அரங்கில் கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் எஸ். கோகுல இந்திரா தலைமையில் நடைபெற்றது.
மக்களின் முதல்வர் ஜெயலலி தா வழிகாட்டுதலின்படி நடப்பு ஆண்டு திட்டத்தின் கீழ் நாளது தேதிவரை விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்ட வேட்டி சேலைகள் மற்றும் கொள்முதல் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. கொள்முதல் செய்யப்பட்டு, கிடங்கில் உள்ள வேட்டி சேலைகளை வருவாய்த்துறையின் மாவட்ட வாரியான தேவை அடிப்படையில் தாலுக்கா அலுவலகங்களுக்கு அனுப்புவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இத்திட்டத்திற்கு தேவையான மொத்த சேலை மற்றும் வேட்டிகளை நடப்பாண்டின் டிசம்பர் 31ம் தேதிக்குள் நிறைவு செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படவேண்டுமென சங்கங்களுக்கு அறிவுரை வழங்கினார். இத்திட்டத்திற்கு தேவையான வேட்டி சேலைகளை 05.12.2014-ல் தாலுகா அலுவலகங்களுக்கு வழங்கும் பணி துவக்கப்பட்டு அனைத்து நடவடிக்கைகளும் முழுவீச்சில் நடைபெற்றுவருவதை கேட்டறிந்த மாண்புமிகு அமைச்சர் அவர்கள் குறிப்பிட்ட காலத்தில் முடித்திட துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்
விலையில்லா வேட்டி சேலைகள் வழங்கும் திட்டத்தின்மூலம் தமிழகத்திலுள்ள கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்கப்படுவதுடன் நெசவாளர்களின் வாழ்க்கைத் தரம் மேம்பாடு அடைவதால் திட்டத்தினை சீரிய முறையில் செயல்படுத்தப்பட வேண்டுமென்று தெரிவித்தார். மேலும், திட்ட உற்பத்தியினை விரைந்து முடிப்பதற்கு தேவையான அனைத்து ஆலோசனைகளையும் வழங்கி, திட்டத்தினை செவ்வனே செயல்படுத்தி அரசுக்கு நற்பெயர் பெற்றுத்தர வேண்டுமெனவும் மாண்புமிகு அமைச்சர் கோகுல இந்திரா தெரிவித்தார். இக்கூட்டத்தில் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறையின் அரசு முதன்மைச் செயலாளர் . ஹர்மந்தர்சிங், கைத்தறி மற்றும் துணிநூல் இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு) . தி.ந. வெங்கடேஷ், துறையின் கூடுதல் இயக்குநர் க. கர்ணன், இணை இயக்குநர்கள், சரக உதவி இயக்குநர்கள், சங்கத் தலைவர்கள் மற்றும் மேலாண்மை இயக்குநர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து