முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ் சினிமாவை மீட்டவர் ஜெயலலிதா: அமைச்சர் புகழாரம்

வியாழக்கிழமை, 18 டிசம்பர் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை - தனியொரு குடும்பத்திடம் சிக்கி சின்னாபின்னமாக கிடந்த தமிழ் சினிமாவை மீட்டுக்கொடுத்தவர் மக்கள் முதல்வர் ஜெயலலிதா என்று சென்னையில் நேற்று சர்வதேச திரைப்படவிழாவில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார்.
சென்னையில் சர்வதேச திரைப்பட விழா ,நேற்று தொடங்கியது. இந்த விழாவை தொடங்கி வைத்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார். அப்போது அவர் பேசியதாவது,:தான் சார்ந்திருந்த துறை என்பதால்தான்,தான் ஆட்சிப் பொறுப்பேற்கும்காலங்களில் எல்லாம்,தமிழ்த் திரைப்படத் துறையின் வளர்ச்சிக்கெனபல அரிய திட்டங்களை வழங்கி,அதன் வலிமைக்கும், செழுமைக்கும்வழி அமைத்துக் கொடுத்து வருகிறார்.மக்கள் முதல்வர் ஜெயலலிதா .,கடந்த 2011ஆம் ஆண்டு, மூன்றாம்முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராகஆட்சிப் பொறுப்பேற்றதும், தனியொருகுடும்பத்திடம் சிக்கிச் சிதைந்து சின்னாபின்னமாகிக் கொண்டிருந்துதமிழ் திரையுலகை மீட்டுக் கொடுத்தார்.ஒரு திரைப்படத்தை உருவாக்குவதில்பங்கேற்கும் அனைத்துக் கலைஞர்களும்கௌரவிக்கப்பட வேண்டும் என்றஉயரிய நோக்கில்,தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள்வழங்கும் திட்டத்தின்கீழ்,1993ஆம் ஆண்டில்,சிறந்த திரைப்பட புதிய விருதுகள் தோற்றுவித்துஆணையிட்டார். தனது நடிப்புத திறனால், தமிழ்திரைக்குஉலகப் புகழ் பெற்றுத் தந்தசிவாஜிகணேசன் பெயரால்விருது ஏற்படுத்தி,விருதாளர்களுக்குஐந்து பவுன் தங்கப் பதக்கமும், கேடயமும்வழங்கிடச் செய்தவர் அம்மா தான்.பெண்ணுரிமை மீதும்,பெண்கள் நலம் மீதும்,தனி அக்கறை கொண்ட மக்கள் முதல்வர் ஜெயலலிதா ,பெண்களைப் பற்றிநல்லமுறையில் பிரதிபலிக்கிறதமிழ்த் திரைப்படத்திற்குபரிசளித்து விருது வழங்க ஆணையிட்டார
. சட்டமன்றத்தில் விதி 110ன் கீழ் அறிவித்தவாறு,எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிபயிற்சி நிறுவன வளாகத்தில்,காலியாக உள்ள 2.5 ஏக்கர் நிலப்பரப்பில்15 கோடி ரூபாய் மதிப்பீட்டில்அதிநவீன வசதிகளுடன்முழுவரும் குளிரூட்டப்பட்ட இரண்டு படப்பிடிப்புத் தளங்கள்அமைக்கப்பட உள்ளன என்பதையும், எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிபயிற்சி நிறுவனத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டுரூ.15 லட்சம் மதிப்பீட்டில் நுழைவாயில் முகப்பு வளைவும், எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலையும்அமைக்கப்பட உள்ளது ஆண்டுதோறும்சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடத்திடஆக்கமும் ஊக்கமும் அளித்து வருகிறார்கள். சர்வதேச திரைப்பட விழா நடத்த,2011ஆம் ஆண்டில் 25 லட்சம் ரூபாயும்,2012ஆம் ஆண்டில் 50 லட்சம் ரூபாயும்,2013ஆம் ஆண்டில் 50 லட்சம் ரூபாயும், அன்றையதினம்மானியமாக முதல்வர் ஜெயலலிதாவழங்கினார்.மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழிநடக்கும் தமிழ்நாடு அரசு, அதேபோலஇந்த ஆண்டும், அதாவது 2014ஆம் ஆண்டுடிசம்பர் 18 முதல் 25 வரைசர்வதேச திரைப்பட விழா நடத்தரூபாய் 50 லட்சம் மானியமாக வழங்கியுள்ளது இந்த ஆண்டு நடைபெறும் , சென்னை சர்வதேச திரைப்பட விழாவில்பிரான்ஸ், பல்கேரியா, உறங்கேரி, ஜெர்மனி, ஈரான்,ஆஸ்திரேலியா, பிரேசில், போலந்து முதலான45 நாடுகளை சேர்ந்த 171 படங்கள் திரையிடப்பட உள்ளன.இதில், கேன்ஸ், வெனிஸ், பெர்லின் திரைப்பட விழாக்களில் பங்கேற்றுவிருதுபெற்ற படங்களும் அடங்கும்.மேலும் 17 தமிழ்த் திரைப்படங்களும்திரையிடப்பட உள்ளன.
இந்த 12வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில்,எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிபயிற்சி நிறுவனத்தில் பயின்று வரும் மாணவர்களால்எடுக்கப்பட்ட ஐந்து படங்கள் திரையிடப்பட உள்ளன என்றும்,அதில் முதலாவதாக தேர்வு செய்யப்படும் படத்திற்கு'அம்மா விருது' வழங்கி கௌரவிக்கப்பட உள்ளார்கள்என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து