முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி, ஸ்ரீகாளஹஸ்தி துணி கடைகளில் தீ விபத்து

வெள்ளிக்கிழமை, 19 டிசம்பர் 2014      வர்த்தகம்
Image Unavailable

திருப்பதி - திருப்பதி மற்றும் ஸ்ரீகாளஹஸ்தி ஆகிய நகரங்களில் உள்ள பிரபல துணிக் கடைகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் கோடிக்கணக்கான மதிப்பிலான துணிகள், நகைகள் கருகின.

திருப்பதி தீர்த்தகட்டு வீதியில் சந்தனா ரமேஷ் எனும் பிரபல துணிக்கடை உள்ளது. 6 அடுக்கு மாடி கொண்ட இந்தக் கடையின் கீழ் தளத்தில் நகைக்கடையும் உள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகள் நெருங்குவதால் கோடிக்கணக்கான மதிப்பிலான புதிய ரக துணிகள் வாங்கி இருப்பு வைக்கப்பட்டிருந்தன.

சம்பவத்தன்று இரவு 10 மணியளவில் வழக்கம்போல் கடை அடைக்கப்பட்டது. பின்னர் சிறிது நேரத்திலேயே கடையிலிருந்து புகை வருவதைப் பார்த்த பாதுகாவலர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து 4 தீயணைப்பு வாகனங்களுடன் அங்கு சென்ற வீரர்கள் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் 3 மாடிகளில் இருந்த துணிகளும், கீழ் தளத்தில் இருந்த நகைகளும் முற்றிலுமாக தீக்கிரையானது. இதனால் ரூ.10 கோடிக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக்க கூறப்படுகிறது.

இதேபோன்று ஸ்ரீகாளஹஸ்தி நகரி வீதியில் உள்ள ஒரு துணிக்கடையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள துணிகள் தீயில் கருகின. தகவல் அறிந்ததும் தீயனைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து