முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதிக்கு ஜாமீன் வழங்குவதா? பார்லி.யில் கண்டன தீர்மானம்

வெள்ளிக்கிழமை, 19 டிசம்பர் 2014      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - மும்பை தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான ஜகியுர் லக்வி ஜாமீனில் விடுவிக்கப்பட்டதை கண்டித்து பாராளுமன்ற லோக்சபையில் அனைத்து கட்சிகளின் ஆதரவோடு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மும்பை தாக்குதலில் முக்கிய குற்றவாளியான ஜகியுர் ரஹ்மான் லக்விக்கு பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதற்கு இந்தியா தனது கவலையை பாகிஸ்தானிடம் தெரிவித்துள்ளது.

இதனிடையே நேற்று லோக்சபையில், பாகிஸ்தானின் செயலை கண்டித்து அனைத்து கட்சிகளின் ஆதரவோடு தீர்மான நிறைவேற்றப்பட்டது. பாகிஸ்தானில் நடந்து வரும் மும்பை தாக்குதல் தொடர்பான வழக்கின் ஒவ்வொரு கட்டத்திலும் நடவடிக்கையிலும் இந்தியா தனது அழுத்தத்தை அளிக்கும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், தீவிரவாதி லக்விக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீன் மனிதாபிமானத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள அனைவரையும் அதிர்ச்சியடை செய்துள்ளது, என்று கூறினார்.

பாராளுமன்ற லோக்சபையில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், 'பயங்கரவாதத்தை எதிர்த்து போரிடப்போவதாக பாகிஸ்தான் அரசு கூறும் நிலையில் தீவிரவாதி லக்விக்கு அந்நாட்டு நீதிமன்றம் எதன் அடிப்படையில் ஜாமீன் வழங்கியுள்ளது என்று புரிந்துகொள்ள முடியவில்லை. இதிலிருந்து பாகிஸ்தானின் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை அனைத்தும் பெயரளவில் தான் என்று தெரிகிறது.

தீவிரவாதி லக்விக்கு எதிரான குற்றம் நிரூபிக்க முடியவில்லை, அவருக்கு எதிராக தக்க ஆதாரம் இல்லை என்று தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் வழங்கியுள்ள விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உடனடியாக தீவிரவாதி லக்விக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை பாகிஸ்தான் நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும், என்றார்.

2008-ம் ஆண்டு மும்பையில் பல்வேறு இடங்களில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் நடத்திய தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலை பாகிஸ்தானிலிருந்து வந்த தீவிரவாதிகள் நடத்தியிருந்தனர்.

இதையடுத்து இந்த வழக்கில் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் செயல்பாட்டுத் தலைவரான ஜகியுர் ரஹ்மான் லக்வி, அப்துல் வாஜித், மஸார் இக்பால், ஹமாத் அமின் சாதிக், ஷாகித் ஜமீல் ரியாஸ் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு, ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். ஜகியுர் ரஹ்மான் லக்வி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான தீவிரவாதத் தடுப்பு நீதிமன்றத்தின் விசாரணையின்போது அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து