முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐதராபாத் - டெல்லி ரயிலுக்கு தெலுங்கானா எக்ஸ்பிரஸ் பெயர் சூட்ட கோரிக்கை

வெள்ளிக்கிழமை, 19 டிசம்பர் 2014      இந்தியா
Image Unavailable

ஐதராபாத் - ஐதராபாத் டெல்லி இடையில் ஓடும் ரயிலுக்கு தெலுங்கானா எக்ஸ்பிரஸ் என பெயர் சூட்ட வேண்டும் என முதல்வர் சந்திரசேகரராவ் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐதராபாத்துக்கும், டெல்லிக்கும் இடையே ஓடும் பயணிகள் ரயில் ஆந்திரா எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் சென்று கொண்டிருக்கிறது. ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலமாக இருந்த போது ஐதராபாத் டெல்லி இடையே சென்று வந்த ரயிலுக்கு இந்த பெயர் வைக்கப்பட்டது. தற்போது ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டு விட்டது. ஐதராபாத் இரண்டு மாநிலங்களுக்கும் பொது தலைநகராக இருந்த போதிலும் தெலுங்கானாவுக்கான நிரந்தர தலைநகரமாக 10 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றப்படவுள்ளது. புதிய தலைநகரை உருவாக்கும் பணியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் ஐதராபாத், டெல்லி இடையில் ஓடும் ஆந்திர எக்ஸ்பிரஸ் ரயிலின் பெயரை மாற்றி தெலுங்கானா எக்ஸ்பிரஸ் என பெயர் சூட்ட வேண்டும் என முதல்வர் சந்திரசேகரராவ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதவும் முடிவு செய்துள்ளார். ஐதராபாத்தில் இருந்து மற்றும் அடிலாபாத் மாவட்டம் சிர்புர் காகஜ்நகர் செல்லும் ரயிலுக்கு தெலுங்கானா எக்ஸ்பிரஸ் என ஏற்கனவே பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பெயரை கொமுராம் பீம் எக்ஸ்பிரஸ் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் எனவும் ராவ் கோரிக்கை வைத்துள்ளார். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாக ஐதராபாத்தை ஆட்சி செய்த மொகலாயர்களை எதிர்த்து போரிட்ட பழங்குடி இன வீரர் பீம் நினைவாக இந்த பெயர் சூட்டப்பட வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து