முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை பலி

வெள்ளிக்கிழமை, 19 டிசம்பர் 2014      இந்தியா
Image Unavailable

சத்தார்பூர் - மத்திய பிரதேச மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. மீ ட்பு குழுவினர் பல மணி நேரம் போராடியும் குழந்தையை உயிருடன் மீட்க முடியவில்லை.

மத்திய பிரதேச மாநிலம் லிதோரா கிராமத்தை சேர்ந்த 14 மாத குழந்தை கிருஷ்ணா. அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் விளையாடி கொண்டிருந்தது. குழந்தையி்ன் பெற்றோர் வயல்வெளியில் வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். ஓடி விளையாடிய குழந்தை அங்கிருந்த மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது.

குழந்தையின் அழுகுரல் கேட்டு பெற்றோர் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு த கவல் கொடுத்தனர். போலீசார் மீட்பு குழுவினருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுமார் 18 அடி ஆழத்தில் விழுந்த குழந்தையை மீட்கும் பணியை துரிதப்படுத்தினர்.

ஆழ்துளை கிணறு அமைந்துள்ள பகுதியில் பாறைகள் இருந்ததால் மீ ட்பு பணிக்கு இடையூறு ஏற்பட்டது. மருத்துவ குழுவினர் குழாய் மூலம் குழந்தைக்கு ஆக்சிஜனை செலுத்தி வந்தனர். பல மணி நேர போராட்டத்துக்கு பின்னர் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் ஆழ்துளை கிணற்றில் இருந்து குழந்தை மீட்கப்பட்டது. குழந்தையை பரிசோதித்த போது குழந்தை இறந்தது தெரியவந்தது. குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

ஆழ்துளை கிணறு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தோண்டப்பட்டது. தண்ணீர் இல்லாததால் ஆழ்துளை கிணற்றை பயன்படுத்தாமல் அப்படியே விட்டு விட்டனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து