முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்கவாழ் இந்திய அழகியாக கல்லூரி மாணவி தேர்வு

வெள்ளிக்கிழமை, 19 டிசம்பர் 2014      உலகம்
Image Unavailable

நியூயார்க் - அமெரிக்கவாழ் இந்திய அழகியாக ஆந்திரா பெண் தேர்வு செய்யப்பட்டார்.

அமெரிக்காவில் வாழும் இந்திய பெண்களுக்கான அழகிப்போட்டி நியூஜெர்சியில் உள்ள ராயல் ஆல்பர்ட் பேலசில் நடந்தது. அதில் பல பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களில் பிரணதி கங்காராஜூ என்ற கல்லூரி மாணவி அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஆந்திர மாநிலம் வாரங்கலை பூர்வீகமாக கொண்டவர்.

இவருக்கு அழகிக்கான கிரீடம் சூட்டப்பட்டது. இவர் கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்கவாழ் இந்திய அழகியாக 19 வயதில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார். அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரணதி வாரங்களில் உள்ள ஹணம் கோண்டாவை சேர்ந்தவர். இவரது தந்தை ராம் கங்காராஜூ கம்ப்யூட்டர் நிறுவனம் நடத்தி வருகிறார். தாயார் பெயர் மைத்ரேயி சர்மா. பிரணதிக்கு தெலுங்கு சரளமாக பேச தெரியும். கதகளி நடனமும் ஆடுவார். வருகிற 2016ம் ஆண்டு 24வது சர்வதேச இந்திய அழகிப்போட்டி கோவாவில் நடைபெறுகிறது. அதில் அமெரிக்கா சார்பில் இவர் கலந்து கொள்கிறார். அமெரிக்கவாழ் இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரணதி கூறும் போது, என்னால் வெற்றி பெற முடியும் என ஊக்குவித்து எனது தாய் தந்தைக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றார். மேலும் அவர் சிரிப்பழகி பட்டமும் வென்றுள்ளார். கடந்த 2007ம் ஆண்டு நடந்த போட்டியில் நடிகை ரிச்சா கங்கோபாத்யாய் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து