முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாமிரபரணி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு

வெள்ளிக்கிழமை, 19 டிசம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

திருநெல்வேலி - பலத்த மழை காரணமாக பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து 8 ஆயிரம் கன அடி தண்ணீ ர் திறக்கப்பட்டது. இதனால் தாமிரபரணி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மேற்கு தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் ஏற்கனவே நிரம்பியுள்ள பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்து. நேற்று முன்தினம் காலை நிலவரப்படி பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு 3 ஆயிரம் கனஅடி நீ ர்வரத்து இருந்தது. பகல் 12 மணியளவில் அணைகளுக்கு நீர்வரத்து திடீரென கணிசமாக அதிகரித்தது. இதையடுத்து அணைகளில் அபாய சங்கு ஒலிக்கப்பட்டது. பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து 8 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டது. உபரிநீர் பாபநாசம் கீழ் அணை வழியே கல்யாண தீர்த்த அருவி, அகஸ்தியர் அருவி வழியாக தாமிரபரணி ஆற்றில் செல்கிறது. இதனால் இரு அருவிகள் மற்றும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதை தொடர்ந்து பாபநாசம், அகஸ்தியர் அருவிகளி்ல் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து