முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைனில் அமைதி பேச்சு மீண்டும் தொடங்குகிறது

வெள்ளிக்கிழமை, 19 டிசம்பர் 2014      உலகம்
Image Unavailable

உக்ரைனில் அரசுக்கும், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் நீண்ட நாட்களாக தடைபட்டிரு ந்த அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடர இரு தரப்பினரும் சம்மதித்துள்ளனர். பெலாரஸ் தலைநகர் மின்ஸ்கில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

 ரஷ்ய அதிபர் புடின், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல் ஆகியோரிடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடலை தொடர்ந்து இதற்கான அறிவிப்பு வெளியானது. அண்மைக்காலமாக ரஷ்ய பொருளாதாரம் தேக்க நிலையை சந்தித்து வருகிறது. புடினின் 1 5 ஆண்டு கால ஆட்சியில் மிக மோசமான நிலைக்கு பொருளாதாரம் தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவின் முரட்டுத்தனம் சற்று தணிந்திருப்பதாக மேற்கத்திய நாடுகளில் கருத்து நிலவுகிறது. இதன் ஒரு பகுதியாகவே அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு ரஷ்யாவும், கிளர்ச்சியாளர்களும் சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து டொனெட்ஸ்க் பகுதி கிளர்ச்சி தலைவர் அலெக்ஸாண்டர் ஸ்கார்சென்கோ கூறுகையில், மின்ஸ்கில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய பிரதிநிதிகள் பங்கேற்பர் என்று தெரிவித்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து