முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் 1-ந் தேதி திறப்பு

வெள்ளிக்கிழமை, 19 டிசம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை - வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் ஜனவரி 1-ந் தேதி திறக்கப்படுகிறது.

பிரசித்தி பெற்ற மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் ஒவ்வொரு மாதமும் ஒரு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற உள்ளது. இதையொட்டி வருகிற 22 ந் தேதி பகல்பத்து திருவிழா தொடங்குகிறது.தொடர்ந்து 31 ந்தேதி தசமி விழா மோகனாவதார விழா நடைபெறும். பின்னர் ஆங்கில புத்தாண்டான ஜனவரி 1 ந்தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. கோவில் வடக்கு பிரகாரத்திலுள்ள சொர்க்கவாசல் வழியாக மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் கள்ளழகர் என்ற சுந்தரராஜபெருமாள் பல்லக்கில் எழுந்தருளியவாறு வருவார். அதைத்தொடர்ந்து சயன மண்டபத்தை சுற்றி வந்து அங்கு எழுந்தருள்வார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். 10 ந்தேதி ராப்பத்து திருவிழா சாற்றுமுறையுடன் திருவிழா நிறைவு பெறும்.

இதைப் போலவே இக்கோவிலின் உபகோவிலான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் அதே நேரத்தில் அதே தேதியில் சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெறும். இங்கும் பக்தர்கள் திரளாக கலந்து கொள்வார்கள். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி வரதராஜன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். மேலும் அன்று ஆங்கில புத்தாண்டு என்பதால் இந்த இரண்டு கோவில்களிலும் மலர்களாலும் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து