முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-வது டெஸ்டில் தோல்வி: கேப்டன் டோணி பேட்டி

சனிக்கிழமை, 20 டிசம்பர் 2014      விளையாட்டு
Image Unavailable

பிரிஸ்பேன் - இந்திய வீரர்களுக்குள் சரியான தகவல் பரிமாற்றம் இல்லாததுதான் ஆஸ்திரேலியாவுடனான 2வது டெஸ்ட் தோற்றதற்கு காரணம் என்று கேப்டன் டோணிகுற்றம்சாட்டியுள்ளார். மேலும், இந்திய அணி வீரர்களுக்கு பயிற்சிக்காக அளிக்கப்பட்ட ஆடுகளம் மிக மோசமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ஆஸி.க்கு எதிரான 2வது டெஸ்டின் 2வது இன்னிங்சின் ஆட்ட நேரம் முடியும்போது, 71 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருந்தது இந்திய அணி. ஆனால் நேற்று காலை அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்து 87 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. இதன்பிறகு ஷிகர் தவான் அடித்த 81 ரன்கள் உதவியுடன் ஓரளவுக்கு மீண்டது. ஆஸ்திரேலிய அணியைவிட 127 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றபோது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இந்தியா.

ஆனால் இந்த ரன்களை எட்டிப்பிடிப்பதற்குள் 6 விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா இழந்தது. இருப்பினும் போராடி அந்த அணி இரண்டாவது டெஸ்டை வென்றது. இந்தியா கூடுதலாக 70 அல்லது 80 ரன்கள் எடுத்திருந்தாலும் ஆஸ்திரேலிய அணியால் 2வது இன்னிங்கிசில் அதை துரத்தி பிரித்திருக்க முடியாது என்றே கிரிக்கெட் பார்வையாளர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்திய பேட்டிங் ஏன் காலையில் அப்படி தடுமாறியது என்பதற்கு டோணி சொன்ன காரணம் பலரது புருவத்தை உயர்த்தியுள்ளது.

போட்டிக்கு பிறகு டோணி கூறியதாவது:

பேட்டிங் பயிற்சிக்காக எங்களுக்கு மோசமான பிட்ச் ஒதுக்கப்பட்டது. அதில் பயிற்சி பெற்றபோது பந்துகள் தாறுமாறாக எகிறி வந்தன. சில நேரங்களில் தாழ்வாகவும் சென்றன. பந்துகளை கணிக்க முடியாதபடி பிட்ச் இருந்தது. இதனால் பயிற்சியின்போது, ஷிகர் தவான் கைகளில் பந்து பட்டு காயம் ஏற்பட்டது. ஆனால் காயம் குறித்து உடனடியாக பிற வீரர்களிடம் ஷிகர் கூறவில்லை.

பேட்டிங் செய்ய இந்தியா களமிறங்க வேண்டிய நேரம் நெருங்கும்போதுதான், தன்னால் பேட்டிங் செய்ய களமிறங்க முடியாது என்று ஷிகர் தெரிவித்தார். எனவே விராட் கோஹ்லியை பேட்டிங் செய்ய அனுப்ப வேண்டியதாயிற்று. விராட்டும், புஜாராவும் களமிறங்கினர். ஷிகர் தவான் முன்கூட்டியே தகவல் தெரிவிக்காததால், விராட்டுக்கு பயிற்சி பெற கூட நேரம் கிடைக்காமல் போனது. நேற்று காலையில் ஏற்பட்ட இந்த குழப்பத்தால்தான் இந்திய பேட்ஸ்மேன்கள் வரிசையாக நடையை கட்ட வேண்டியதாயிற்று. தகவல் தொடர்பில் இருந்த குறைபாடே இதற்கு காரணம். இவ்வாறு டோணி தெரிவித்தார்.

வரிசையாக விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில், வேறு வழியில்லாமல் வலியோடு ஷிகர் களமிறங்கினார். ஆனால் ஆட்டம் தொடங்கி அப்போதுதான் 45 நிமிடங்கள் ஆகியிருந்தன. 45 நிமிடங்கள் கழித்து களமிறங்கிய ஷிகர் தவான், முதலிலேயே வழக்கம்போல களமிறங்கியிருக்கலாமே என்ற கேள்வி வீரர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து