முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிசிசிஐ, ஐபிஎல் நிர்வாகம் ரூ.261.64 கோடி சேவை வரி ஏய்ப்பு

சனிக்கிழமை, 20 டிசம்பர் 2014      விளையாட்டு
Image Unavailable

புது டெல்லி - பிசிசிஐ நிர்வாகம் ரூ.261.64 கோடி சேவை வரி ஏய்ப்பு செய்துள்ளது என்று மத்திய நிதி இணை அமைச்சர் ஜயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

இது தவிரவும், 2,148.3 கோடி தொகைக்கு அன்னியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்திற்கு புறம்பாக பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளது தொடர்பாக பிசிசிஐ, லலித் மோடி ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் எழுத்து பூர்வமாக பதில் அளித்த மத்திய நிதி இணை அமைச்சர் சின்ஹா விளக்கம் கேட்டு 4 நோட்டீஸ்கள் அனுப்பப் பட்டதோடு ரூ.98.35 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பிசிசிஐ/ஐபிஎல் அமைப்பு வரி ஏய்ப்பு செய்திருப்பது மற்றும் அன்னிய செலாவணிக்கு புறம்பான பரிவர்த்தனைகள் மேற்கொண்டது பற்றிய கேள்விக்கு ஆம் என்று சின்ஹா பதில் அளித்தார்.

மேலும், அன்னியச் செலாவணி சட்டத்தை மீறி அயல்நாட்டு வீரர்களை ஏலம் எடுப்பது தொடர்பாக 18.6 மில்லியன் டாலர்கள் தொகைக்கு கூடுதலாக உத்தரவாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் இது தொடர்பாக விசாரணை முன்னேறிய நிலையில் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், 2009ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்ற போது, ஆப்பிரிக்க நாட்டில் அயல்நாட்டு பணப் பரிவர்தனை கணக்கை மத்திய ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாமல் தொடங்கி அதில் 49.86 மில்லியன் டாலர்கள் தொகையை செலுத்தியது தொடர்பாகவும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து