முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிகாரிக்கு மிரட்டல்: பாஜ எம்.எல்.ஏ கட்சியில் இருந்து இடைநீக்கம்

சனிக்கிழமை, 20 டிசம்பர் 2014      அரசியல்
Image Unavailable

ஜெய்ப்பூர் - ராஜஸ்தான் மாநிலத்தில் ஆண் செவிலியர் ஒருவருக்கு இடமாறுதல் கேட்டு தலைமை மருத்துவ அதிகாரியை மிரட்டிய பாஜக எம்.எல்.ஏ. பிரகலாத் குஞ்சால், கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கோட்டா தொகுதி எம்எல்ஏ குஞ்சால். இவர் கோட்டா மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஆர்.என்.யாதவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தமது கட்சி நிர்வாகி ஒருவரின் உறவினருக்கு பணியிட மாற்றம் கேட்டுள்ளார். இதை ஏற்காத யாதவை அடிப்பேன், உதைப்பேன், தோலை உரிப்பேன் என்றெல்லாம் எம்எல்ஏ வசைமாறி பொழிந்துள்ளார்.

 இதுகுறித்த ஆடியோ பதிவு சமூக வலைதளத் தில் பரவி, பரபரப்பை ஏற்படுத்தி யது. இதைத் தொடர்ந்து, எம்எல்ஏ மீது காவல் நிலையத்தில் அதிகாரி யாதவ் புகார் கொடுத்தார். மருந்துகளை கையாடல் செய்ததாக, எல்எல்ஏ குறிப்பிடும் பணியாளர் மீது குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பாக துறை ரீதியிலான விசாரணை நடைபெற்று வருகிறது. இதுபற்றி தெரிவித்தும் அவருக்கு இடமாறுதல் கேட்டு எம்எல்ஏ பிடிவாதம் காட்டினார், என்று யாதவ் கூறினார்.

யாதவ் புகாரை தொடர்ந்து குஞ்சால் மீது நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்யப்பட்டது.குஞ்சால் தன் மீதான குற்றச்சாட்டு களை முதலில் மறுத்தார். பின்னர் தனது கட்சிக்கும் இந்திய மருத்துவ சங்கத்துக்கும் எழுத்து மூலம் மன்னிப்பு கோரியுள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு நேற்று டெல்லியில் கூறும்போது, "தகாத வார்த்தைகளை பயன்படுத் திய எம்எல்ஏ கட்சியில் இருந்து சஸ் பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விளக்கம் கேட்கப்பட் டுள்ளது. இதுபோன்ற செயல்பாடு களை ஏற்க இயலாது" என்றார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து