முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்டாய மதமாற்றத்தை பாஜக ஆதரிக்காது: அமித் ஷா

சனிக்கிழமை, 20 டிசம்பர் 2014      அரசியல்
Image Unavailable

கொச்சி - கட்டாய மதமாற்றத்தை பாஜக ஒருபோதும் ஆதரிக்காது என கேரள மாநிலம் வந்த பாஜக தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

கொச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கட்டாய மதமாற்றத்தை பாஜக ஒருபோதும் ஆதரிக்காது. மதச்சார்பின்மை பற்றி பேசும் சில அரசியல் கட்சிகள் உண்மையில் அக்கொள்கையில் தீவிரமாக இருந்தால், மதமாற்ற தடுப்புச் சட்டத்தை இயற்ற பாஜகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்" என்றார்.

உத்தரப்பிரதேசத்தில் 'கர் வாப்ஸி' என்ற பெயரில் கட்டாய மதமாற்றம் நடந்தது தொடர்பாக அமித் ஷாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளிக்க மறுத்த ஷா, "விவகாரம் நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது. அதனால் அது பற்றி பேச தயாராக இல்லை" எனக் கூறினார்.

தேசத்தை மதத்தின் அடிப்படையில் பிரிக்க பாஜக முயற்சிப்பதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி முன்வைத்த குற்றச்சாட்டை அவர் திட்டவட்டமாக மறுத்தார். "அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு" என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து