முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவள்ளூரில் புதிய மின் ஆளுமை மையம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்

சனிக்கிழமை, 20 டிசம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை - பொதுமக்கள் இருக்கும் இடத்திலேயே சான்றிதழ்களை பெற வழிவகை செய்யும் மின் ஆளுமை சேவை மையங்களை பொது மக்கள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அமைச்சா் .பி.வி.ரமணா வேண்டுகோள் விடுத்தார்

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் சார்;பில் அமைக்கப்பட்டுள்ள மின் ஆளுமை சேவை மையம் தொடக்க விழா திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. பால்வளத் துறை அமைச்சர் .பி.வி.ரமணா, திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று தொடங்கி வைத்து பேசினார் . அப்போது அவர் பேசியதாவது:

மக்களின் முதல்வா் ஜெயலலிதா , பொது மக்களுக்கு அரசின் சேவைகளை இருப்பிடத்திலேயே வழங்கும் நோக்கில் மின் ஆளுமை சேவை மையங்களை மாநிலம் முழுவதும் தொடங்கப்படுவதற்கு ஆணையிட்டுள்ளார். இதை தொடர்ந்து திருவள்ளுர் மாவட்டத்தில் மின் ஆளுமை சேவை மையங்கள் தொடங்கப்பட உள்ளது. திருவள்ளுர்; பள்ளிப்பட்டு, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருத்தணி மற்றும் ஊத்துக்கோட்டை ஆகிய ஆறு வட்டாட்சியர் அலுவலகங்களில் திறக்க திட்டமிடப்பட்டு முதல் கட்டமாக திருவள்ளுர் வட்டாட்சியா; அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ளது. மின் ஆளுமை சேவை மையம் மூலம் கணவனால் கைவிடப்பட்டோரக்கான சான்றிதழ், வருமானச் ;சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் போன்ற தமிழ்நாடு அரசின் சேவைகளை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி மேலான்மை இயக்குநர் குமரகுருபரன் பேசுகையில் "தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் ரூ. 7 கோடி மதிப்பீட்டில் தமிழகம் முழுவதும் உள்ள வட்டாட்சியா; அலுவலகங்களில் மின் ஆளுமை ;சேவை மையங்கள் அமைக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தமிழகம் முழுவதுமுள்ள 254 வட்டாட்சியர் அலுவலகங்களுள் சென்னை மாநகராட்சிப் பகுதியைச் சேர்ந்த 20 வட்டாட்சியர் அலுவலகங்கள் நீங்கலாக மீதமுள்ள 234 வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பொது சேவை மையங்கள் நடவடிக்கைகள் எடுத்து வருவதாக தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் ராகுல்நாத், பூவிருந்தவல்லி எம்.எல்.ஏ; மணிமாறன், நகா;மன்ற தலைவா;.அ.பாஸ்கா;, ஒன்றியகுழுத் தலைவர்ககள் . சந்திரசேகரன் (திரு. குணாளன் தட்சிணாமூர்த்தி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் . அ.செந்தில், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து